காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்.. அரசு அதிகாரி பலி! உமர் அப்துல்லா வேதனை!
காஷ்மீர்: இந்தியாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவின் காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது. இன்று காஷ்மீரின் ராஜோரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மாவட்ட வளர்ச்சிப்பணி அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் 10 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அத்துமீறும் பாகிஸ்தான்
இந்த தாக்குதலுக்கு பதிலடி தர நினைத்து மறுநாள் இரவே டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா மீது அனுப்பியது. ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. வானிலேயே ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்திய வான்வழி பாதுகாப்பு அம்சங்கள் அழித்து ஒழித்தன. இதனால் டென்ஷன் ஆன பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை அதிகரித்தது.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எப்படியாவது இந்தியாவை தாக்க வேண்டும் என நினைத்து எதையாவது செய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக முயற்சித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தையும் இந்தியா தவிடுபொடியாக்கி வருகிறது. நேற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
அரசு அதிகாரி பலி
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராஜ்குமார் தப்பா என்ற அதிகாரி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். மாவட்ட வளர்ச்சி அதிகாரி எஸ் ராஜ் குமார் தாப்பா உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உமர் அப்துல்லா வேதனை
உமர் அப்துல்லா இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- "அர்ப்பணிப்பு மிக்க அதிகாரியை இழந்துள்ளோம். நேற்று கூட அவர் ஆலோசனைக்கூட்டதில் கலந்து கொண்டார். இன்று அவரது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. எனது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications