Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், ஏற்கனவே தெலுங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் வகித்து வருகிறார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக காலூன்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 4 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டசபைக்குள் பாஜக நுழைந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன்

மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன்

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவரான இல. கணேசன், தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக, பாஜகவின் தேசிய துணைத் தலைவராக, ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தவர் இல.கணேசன்.

மேகலாயா ஆளுநராக சண்முகநாதன்

மேகலாயா ஆளுநராக சண்முகநாதன்

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சண்முகநாதன், மேகாலயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அருணாச்சல் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். ஆனால் மேகாலயா ஆளுநர் மாளிகையை அந்தப்புரமாக மாற்றிவிட்டார் சண்முகநாதன் என ராஜ்பவன் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர். அத்துடன் சண்முகநாதனுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினர். இதனால் சண்முகநாதன் தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் திரும்பினார்.

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன்

பின்னர் 2019-ல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டவர் தமிழிசை சவுந்தரராஜன். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள். ஆனாலும் பாஜகவின் தீவிர இந்துத்துவா கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டவர். தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்

இந்நிலையில் தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல. கணேசன், மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஆளுநராக நியமிக்கப்படுவது இது 3-வது முறையாகும். 1945-ம் ஆண்டு பிறந்த இல.கணேசன், சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். 1991-ல் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். 2009, 2014 லோக்சபா தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த இல. கணேசன், இந்த வாய்ப்பை வழங்கிய குடியரசு தலைவர்,பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பாரத தேசம் ஒரு வீடு போல ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்லும் உணர்வு தான் எனக்கு என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+