நாங்க பார்த்துக்கிறோம்! அமலாக்கத்துறை சொன்ன ஒரு வார்த்தை.. விடாது போலயே! செந்தில் பாலாஜிக்கு சிக்கல்
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கும் முன் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் முக்கியமான விஷயம் ஒன்றை கேட்டது. இதற்கு அமலாக்கத்துறை சொன்ன பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்படி என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதாவது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை முறையின்றி கைது செய்து இருப்பதாக அவரின் மனைவி மனுதாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவரின் வழக்கு விசாரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் முதலில் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்கில் தனி தனி தீர்ப்பு வழங்கினர். இதனால் மூன்றாவது நீதிபதி சி கார்த்திகேயன் முன் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அதன் முடிவில் செந்தில் பாலாஜி கைது சரியானதே.. இதை சட்ட விரோதம் என்று கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது. இதனால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் உடனடியாக செந்தில் பாலாஜி மனைவி சார்பாக ஆட்கொணர்வு மனுவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இந்த உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கடந்த ஒன்றரை வாரமாக தீவிரமாக விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.
நீதிமன்ற காவலுக்கு போன பின் அது எப்படி சட்ட விரோத கைதாக இருக்கும். நீதிமன்ற காவல் என்பது ஒரு கைதை அதிகாரபூர்வமாக்கிவிடுகிறது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது தவறு என்று சொல்ல முடியாது. அதோடு அவருக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவும் செல்லாது.
இதனால் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை இன்றி கூறி செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறை காவலில் அவரை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருத கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தீர்ப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கும் முன் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் முக்கியமான விஷயம் ஒன்றை கேட்டது. இதற்கு அமலாக்கத்துறை சொன்ன பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி அமலாக்கத்துறையிடம்.. செந்தில் பாலாஜி உடல்நிலையில் கவனம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதற்கு அவரின் உடல்நிலையை நாங்கள் கவனமாக பார்த்துக்கொள்வோம் என்று உறுதி அளித்துள்ளனர் . முன்பு உடல்நிலையை காரணம் காட்டி கஸ்டடியில் எடுக்க யோசித்த அதே அமலாக்கத்துறை இப்போது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற உறுதியுடன் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications