செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ ரிப்போர்ட்டா.. எப்போ ஸ்கேன் செய்தீங்க.. கேள்வி கேட்ட நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு 8 முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

 SC to hear about appeal petition of Senthil Balajis bail plea

இந்த நிலையில் அவர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அவரது தம்பி தலைமறைவாக உள்ளதால் அவருக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சி, ஆதாரங்களை கலைத்துவிடுவார் என்பதால் நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அமைச்சர் தரப்பு கூறியிருப்பதாவது" உடல்நல பாதிப்பை காரணம் காட்டியதை உயர்நீதிமன்றம் சரியாக ஆராயவில்லை. அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதை ஒரு காரணமாக கூறி ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதை ஏற்க முடியாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருடைய உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதிகள் எம்ஆர்ஐ ஸ்கேன் எப்போது எடுத்தது என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி கடந்த 3 தினங்களாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையும் ஒரு காரணமாக காட்ட செந்தில் பாலாஜி தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+