"காம நெடி"..எப்ப பார்த்தாலும் ஆபாச படம்.. ஐயோ "38 பிஞ்சுகள்".. நம் நாட்டையே அலறவைத்த சீரியல் கில்லர்
டெல்லி: நேற்றுமுதல் ரவீந்தர் குமார் என்ற குற்றவாளியை பற்றியே சோஷியல் மீடியா முழுவதும் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.. யார் இந்த ரவீந்தர் குமார்? என்ன நடந்தது?
36 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்தான், இந்த குற்றவாளி.. டெல்லி நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனையை விதித்துள்ளது..
யார் இந்த ரவீந்தர்?:
டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில், கடந்த 2008 முதல் 2015 ம் ஆண்டுவரை இந்த கொடூரங்களை ரவீந்தர் குமார் செய்து வந்துள்ளார்.. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக இது தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இப்போது இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரவீந்தர் குமார், உத்தரபிரதேசத்தின் கஸ்கஞ்சியை சேர்ந்தவர்.. 2008-ம் ஆண்டில் குடும்பத்துடன் வேலை தேடி டெல்லிக்கு வந்திருக்கிறார்கள்.. இவரது அப்பா ஒரு பிளம்பர்.. குடும்ப சூழலை சமாளிக்க, இவரது அம்மா, வீட்டு வேலைகளை செய்து வந்தார்..
இதனால், ரவீந்தரும் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.. நாளடைவில் எப்படியே போதைப்பொருளுக்கு ஆளாகிவிட்டார்.. டெல்லி வந்தபிறகுதான் போதைப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.. போதை மண்டைக்கு ஏறியதுமே, ஆபாச படங்களை பார்க்க வேண்டும் என்று துடிப்பாராம்.. வீடியோ கேசட்டில் ஆபாசப் படம் பார்க்கத் தொடங்கினார்.
ஆபாச படங்கள்:
ஒருகட்டத்தில் ஆபாசப் படங்களை பார்க்காமல் இவரால் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளானார்.. இறுதியில், பாலியல் வக்கிரம் உச்சத்துக்கு போகவும், குழந்தைகளை தேடி தேடி சென்று பாலியல் வன்கொடுமை செய்வதுடன், அவர்களை துடிக்க துடிக்க கொலையும் செய்துவிடுவார்.. இதுவே இவரது வாடிக்கையாகவும் மாறியது..
18 வயதில் பெண்களை சீரழித்து கொலை செய்ய ஆரம்பித்து, அடுத்தடுத்த 7 ஆண்டுகளில், 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார். நாளெல்லாம் கூலி வேலை பார்ப்பாராம் ரவீந்தர்.. சாயங்காலம் ஆகிவிட்டால், போதையை ஏற்றிக் கொள்வாராம்.. இரவு 8 மணி முதல் 12 மணி வரை சேரியில் உள்ள தன்னுடைய ரூமில் தூங்கிவிட்டு, 12 மணிக்கு மேல், பெண் குழந்தைகளை தேடிச்செல்வாராம்..

நடந்தே போவாராம்:
காமப்பசிக்கு குழந்தைகள் யாரும் கிடைக்காவிட்டால், கட்டுமானத்தளங்கள் மற்றும் சேரிகளை சுற்றி 40 கிலோமீட்டர்கள் வரை நடந்தே சென்று, பெண்களை தேடி போவாராம்.. முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்குதான் குறி வைத்திருக்கிறார்..
குழந்தைகளைக் கவரும் வகையில் 10 ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றையும், சாக்லேட்களையும் எடுத்து தனியாக பாக்கெட்டில் வைத்து கொள்வாராம்.. குழந்தைகளை பார்த்ததுமே, அவர்களிடம் நைசாக பேச்சு தந்து, தனி இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அங்கேயே கொலையும் செய்துவிடுவாராம்.. அந்த குழந்தைகள் தன்னை அடையாளம் காட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் கொலை செய்துவிடுவாராம்.. இப்படி 6 முதல் 12 வயது கொண்ட குழந்தைகள் வரை கொடூரமாக இவரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதிரடி கைது:
முதன்முதலில், 2008-ல் டெல்லி கராலா பகுதியில் இருந்து ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.. ஆனால், போலீசாரிடம் சிக்காமல் தப்பி விட்டார்.. இதுதான் அடுத்த பாலியல் குற்றத்துக்கு துணிச்சலை தந்துள்ளது.. . ஆனால், 2015-ல் டெல்லியின் புறநகர் பகுதி போலீஸ் அதிகாரி விக்ரம்ஜீத் சிங் என்பவர்தான், ரவீந்தரை தட்டிதூக்கி உள்ளார்.. அப்போது இவர் தந்த வாக்குமூலத்தில், ஒவ்வொரு கொலையையும் பற்றியும் விரிவாக விளக்கம் தந்தாராம்..
பகீர் வாக்குமூலம்:
அந்த வாக்குமூலங்களை கேட்டு போலீசாரே மிரண்டு போனார்கள்.. பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்துவிட்டு, மூன்று விரல்களால் மட்டுமே கழுத்தை நெரித்துவிடுவாராம்.. அதற்கு பிறகும் பலாத்காரம் செய்வாராம்..

இதில் ஒரு சிறுமிக்கு 6 வயதாம்.. 2015-ல் இந்த சிறுமியை சீரழித்து கொன்றுள்ளார்.. இந்த சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் போலீசுக்கு புகார் தரவும்தான், ரவீந்தர் சிக்கினார்.. இதுகுறித்து விசாரிக்கும்போதுதான், 2008 முதல் நடந்த அத்தனை கொடூரமும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. பலாத்காரமும், கொலையும் "ஒரு வேட்டையாடும் செயல்" என்று கெத்தாக வாக்குமூலத்தில் சொல்லியிருந்தார் ரவீந்தர் குமார்..
ஆயுள்:
இதெல்லாம் அன்றைய மீடியாக்களில் பரபரப்பாக வெளிவந்த நிலையில், இப்போதுதான் ரவீந்தருக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 முதல் ஜெயிலில் இருக்கும் ரவீந்தர், தொடர்ந்து கைதியாகவே ஆயுளை அவர் கழிக்க வேண்டி உள்ளது.
"குற்றவாளியின் செயல், சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய வேட்டையாடும் ஒருவரின் செயலை விட குறைவானது அல்ல என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எந்த வகையிலும் மன்னிப்புக்கு தகுதியானவர் அல்ல" என்று நேற்றைய தினம் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் சொன்னதுடன், ஆயுள் தண்டனையையையும் விதித்துள்ளார்.. இந்த தீர்ப்பு டெல்லி மட்டுமல்லாமல், தேசம் முழுவதும் கவனத்தை பெற்று வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications