"மத்திய அரசுக்கு ஒரு விலை.. மாநில அரசுகளுக்கு ஒரு விலை.. சீரம் நிறுவனம் செய்வது நியாயமற்றது"
டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு ஒரு விலையையும் மாநில அரசுகளுக்கு இன்னொரு விலையையும் சீரம் நிறுவனம் நிர்ணயித்தது நியாயமற்றது என மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலின் 2ஆவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அந்த வகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலில் போட உத்தரவு பிறப்பித்த நிலையில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல்செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையை சீரம் நிறுவனம் தற்போது நிர்ணயித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்துக்கு ரூ 400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 600க்கும், மத்திய அரசுக்கு ரூ 150க்கும் கொடுக்கவுள்ளதாக சீரம் நிறுவனம் புதிய விலையை அறிவித்துள்ளது.
இந்த புதிய விலையேற்றத்திற்கு மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது முட்டாள்தனம், என்ன காரணம் என்பது தெரியவில்லை என்கிறார்கள். விலையேற்றம் குறித்து சீரம் நிறுவனம் கூறுகையில் சீரம் நிறுவனம் இந்த தொற்று காலத்தை பயன்படுத்தி அதிக லாபத்தை ஈட்ட நினைக்கவில்லை.
உலக நாடுகளின் தடுப்பூசிகளோடு ஒப்பிட்டால் கோவிஷீல்டின் விலை குறைவுதான். ஒரு டோஸுக்கு நாங்கள் ரூ 150 ஐ இழக்கிறோம். தடுப்பூசி விலை 50 சதவீதத்தை காப்புரிமைக்காக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துக்கும் செலுத்த வேண்டியுள்ளது என விளக்கமளித்துள்ளது.
மத்திய அரசுக்கு குறைந்த விலையிலும் மாநில அரசுகளுக்கு அதிக விலையிலும் விற்பனை செய்யப்படுவது நியாயமற்ற செயல் என விமர்சனம் செய்யப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications