பாரத் பந்த்: வங்கி, அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயக்கம்! வடமாநிலங்களில் லேசான பதற்றம்
டெல்லி: உச்சநீதிமன்றம் சமீபத்தில் உள் இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பளித்திருந்தது. அதில், பொருளாதாரத்தில் முன்னேறிய எஸ்சி, எஸ்டி பிரிவினரை உள்ஒதுக்கீட்டில் இருந்து நீக்க மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் மற்றும் பழங்குடி அமைப்பினர் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எனவே இன்று எது இயங்கும்? என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடஒதுக்கீடு: தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல, பஞ்சாப் மாநில அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி, மஜாபி சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது. இந்த இரண்டு உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்இடஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

விசாரணை: இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. அதாவது இந்த வழக்கு மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், மனோஜ் மிஸ்ரா, விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம்.திரிவேதி ஆகிய 7 பேர் அடங்கிய அமர்வு கையில் எடுத்தது.
இப்படியாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த 1ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில்,
உத்தரவு: "கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினருக்கான (எஸ்டி) இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனினும், உரிய ஆய்வுகளுக்கு பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். துல்லியமான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம், பஞ்சாப் அரசின் உள்ஒதுக்கீடு சட்டம் செல்லும்" என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய 6 நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகிய 4 நீதிபதிகள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கிரீமிலேயர்: அதாவது எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும். முதல் தலைமுறையினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறை உயர்ந்த நிலையை எட்டிவிட்டால், 2-ம் தலைமுறைக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது. தற்போது ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே கிரீமிலேயர் நடைமுறை அமலில் உள்ளது. இதே நடைமுறையை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் அமல்படுத்த வேண்டும்.
ஏன் சர்ச்சை?: எஸ்சி, எஸ்டி பிரிவில் பொருளாதாரத்தில் முன்னேறியவா்களை உள்ஒதுக்கீட்டில் இருந்து நீக்க மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுதான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இப்போது வரை அவர் எட்டியுள்ள உயரம் போதுமானதாக இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
பந்த்: எனவே தலித் மற்றும் பழங்குடி அமைப்பினர் இன்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆர்ஜேடி ஆதரவு தெரிவித்துள்ளது.
என்னவெல்லாம் இயங்கும்?: போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகள் அனைத்து வணிக நிறுவனங்களும் பந்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் வணிக நிறுவன உரிமையாளர்களின் கூட்டமைப்பினர் பந்த்தில் பங்கேற்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல பொதுப் போக்குவரத்துகள் வழக்கம்போல இயங்குகின்றன. பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படுகின்றன.
நிலைமை என்ன?: பீகார், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சற்று பதற்றமான சூழல் நிலவுகிறது. பீகாரின் ஜகனாபாத் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. அதேபோல உந்தாவில் தேசிய நெடுஞ்சாலை 83ஐ முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் மறியல் செய்து வருகின்றனர். அதேபோல ஷேக்புராவில் பீம் சேனா உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவிலும் சம்பல்பூர் உட்பட பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சம்பல்பூர்-பூரி மற்றும் சம்பல்பூர்-ராயகடா ரயில்களை கெத்ராஜ்பூர் ரயில் நிலையத்தில் மறித்து, போராட்டக்காரர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மற்ற மாநிலங்களில் வங்கிகள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் இதுவரை பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் பதற்றமான பகுதிகளில் போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications