2025-ன் ஸ்டைலிஷ் நடிகர்.. நியூயார்க் டைம்ஸ் லிஸ்டில் இடம் பிடித்த இந்திய டாப் ஹீரோ.. யார் தெரியுமா?
டெல்லி: 2025 ஆம் ஆண்டிற்கான ஸ்டைலிஷ் நடிகர் லிஸ்டில் இந்திய டாப் நடிகரான ஷாருக்கான் இடம்பிடித்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான '67 மிகவும் ஸ்டைலான நபர்கள்' பட்டியலில் ஷாருக்கான் இடம்பிடித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான '67 மிகவும் ஸ்டைலான நபர்கள்' பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம்பிடித்துள்ளார். 60 வயதான ஷாருக்கான், மெட் காலா நிகழ்வில் பிரபல வடிவமைப்பாளர் சபேசவி முகர்ஜி வடிவமைத்த உடையில் கலந்துகொண்டதற்காக இந்த அங்கீகாரத்தைப் பெற்றார்.

மெட் காலா நிகழ்வில், ஷாருக்கான் கருப்பு நிற பிரத்தியேக ஆடையில் தோன்றினார். அவரது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, 'K' எழுத்து வடிவிலான க்ரிஸ்டல் பதித்த பதக்கத்துடன் மிளிர்ந்தது. இது அவரின் தனித்துவமான ஸ்டைலை வெளிப்படுத்தியது.
பட்டியலில் ஷாருக்கான் குறித்து கூறப்பட்டதாவது:- "ரசிகர்களால் 'எஸ்ஆர்கே' என அறியப்படும் பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரமும், உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவருமான ஷாருக்கான், முதல் முறையாக மெட் காலாவுக்கு வருகை தந்து, அந்நிகழ்வையே தன் வசப்படுத்தினார்.
பிரபலங்களான சப்ரீனா கார்பென்டர், டோச்சி, ஏபி ராக்கி, விவியன் வில்சன், நிக்கோல் ஷெர்சிங்கர் உள்ளிட்ட பலரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் தனித்துவமான ஸ்டைலால் பாராட்டப்பட்டனர்.
"கிங்" என்ற திரைப்படத்தில் தற்போது ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் மற்றும் தீபிகா படுகோனுடன் நடிக்கிறார். இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்லிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கின்றன. இயக்குநர் சித்தார்த் ஆனந்துடன் ஷாருக்கான் இதற்கு முன் 2023 இல் வெளியான "பதான்" மூலம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கண்டார்.












Click it and Unblock the Notifications