தற்கொலை படையினரின் களமாக மாறிவிட்டது டெல்லி ஷாகீன் பாக்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறும் ஷாகீன் பாக் பகுதி தற்கொலை படையினரை உருவாக்கும் களமாக மாறி இருக்கிறது என மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தேர்தலில் மத்திய பாஜக அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கிரிராஜ் சிங் ஆகியோரது பேச்சுகள் பெரும் சர்ச்சைகளாகின.

இந்நிலையில் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றும் ஷாகீன் பாக் பகுதியை தற்கொலைப் படையினரை உருவாக்கும் களம் என விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கிரிராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது:
ஷாகீன் பாக் என்பது ஒரு இயக்கம் அல்ல. அங்கே தற்கொலைப் படையினரை உருவாக்குகின்றனர் . நாட்டின் தலைநகரில் அமர்ந்து கொண்டு தேசத்துக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஷாகீன் போராட்ட களத்தில் இறந்து போன குழந்தையை போராளி என்கிறார் ஒரு பெண்மணி. அப்படியானால் தற்கொலை படை அல்லாமல் வேறு என்னவாம்?
இத்தகைய தற்கொலை படையினரிடமும் காலிபாத் இயக்கத்தினரிடமும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications