விவசாயிகள் டிராக்டர் பேரணியில் குழப்பம்... சசி தரூர் மற்றும் 6 செய்தியாளர்கள் மீது தேச துரோக வழக்கு
டெல்லி: குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் 6 செய்தியாளர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலனிற்கு எதிராகவும் காப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுக் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

டிராக்டர் பேரணி
மத்திய அரசு விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயச் சங்கங்கள் இம்மாத தொடக்கத்தில் அறிவித்தன. அதற்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசுக்கும் விவசாயச் சங்கங்களும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

உயிரிழந்த விவசாயி
இதையடுத்து குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி பேரணி நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இந்த டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். அந்த விவசாயி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. இதை சசி தரூர் உள்ளிட்ட பலரும் ட்வீட் செய்திருந்தனர். அதேபோல செய்தியாளர்கள் சிலரும் இதே தகவலை ட்வீட் செய்திருந்தனர்.

போலீசார் விளக்கம்
ஆனால், டிராக்டர் பேரணியின்போது டெல்லி போலீசார் ஒரு துப்பாக்கி குண்டைகூட சுட வில்லை என்றும் அந்த விவசாயி டிராக்டர் கவிழ்ந்தே உயிரிழந்தார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் டெல்லி போலீசார் வெளியிட்டனர். அதில் போலீசாரின் தடுப்பில் டிராக்டர் ஒன்று மோதுகிறது, அப்போது நிலை தடுமாறி திடீரென்று டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்திலேயே விவசாயி உயிரிழந்தார்.

பொய்யான தகவல்
இதையடுத்து பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சசி தரூர் மற்றும் செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் வசிக்கும் ஒருவர் நோய்டா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சசி தரூர் மற்றும் 6 செய்தியாளர்கள் மீது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது, பொய் செய்தி பரப்புவது ஆகியவற்றுகாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேச துரோக வழக்கு
அவர்கள் மீது தேச துரோக வழக்கு, சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசி தரூர் தவிர்த்து செய்தியாளர்கள் மிருனல் பாண்டே, ராஜ்தீப் தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் ஆகா, பரேஷ் நாத் மற்றும் அனந்த் நாத் ஆகியோர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை நோய்டா காவல் நிலையத்திலுள்ள போலீஸ் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications