"இது Delimitation இல்லை.. அரசியல் Demonetisation!" நாடாளுமன்றத்தில் சீறிய சசி தரூர்.. ஆவேச பேச்சு
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இது தொடர்பாகப் பேசிய லோல்கசபா எம்பி சசி தரூர், தொகுதி மறுசீரமைப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு அரசியல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என அவர் விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதாக்கள் மீது விவாதம் நடந்து வருகிறது. அப்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா பேசிய சசி தரூர் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

அரசியல் பணமதிப்பிழப்பு
பெண்களுக்கான அதிகாரத்தைக் கொடுங்கள்.. ஆனால் அதைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற முள்வேலிக்குள் அடைக்காதீர்கள் என்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறினார். 2016ல் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த அவசரத் தொகுதி மறுசீரமைப்பு "அரசியல் பணமதிப்பிழப்பு" (Political Demonetisation) ஆக முடிந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அனைத்துக் கட்சிகளுமே ஒருமனதாக ஆதரிப்பதாகத் தெரிவித்த அவர், ஆனால் இதை வைத்து மசோதாவில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய முயல்வது கவலையடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும், "பெண்களுக்கு நீதி என்ற பெயரில் பிரதமர் ஒரு பரிசை வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் பரிசைச் சுற்றித் தொகுதி மறுசீரமைப்பு என்ற முள்வேலியைப் பிணைத்துள்ளார்.
அடகு வைப்பதற்குச் சமம்
தொகுதி மறுசீரமைப்பை மகளிர் இட ஒதுக்கீட்டுடன் இணைப்பது என்பது இந்தியப் பெண்களின் கனவுகளை அடகு வைப்பதற்குச் சமம்.. இட ஒதுக்கீடு என்பது இப்போது அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர் போன்றது. அதனை இப்போதே இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை வைத்து அமல்படுத்தலாம். அதற்கு ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சிக்கலான தொகுதி மறுசீரமைப்புக்காகக் காத்திருக்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு
குறிப்பாக, தென் மாநிலங்களின் உரிமைகள் குறித்து அவர் முன்வைத்த வாதங்கள் மிக முக்கியமானவை.. அவர் இது தொடர்பாக, "தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் தேசிய இலக்கான மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளன. ஆனால், வட மாநிலங்கள் இதில் பின்தங்கியுள்ளன.. மக்கள் தொகையைக் குறைத்த மாநிலங்களுக்குத் தண்டனை வழங்குவது போலவும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்குக் கூடுதல் எம்பி இடங்களை வழங்கிப் பரிசு கொடுப்பது போலவும் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடும்
இது மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையைக் குலைத்து, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டு வைத்துவிடும்.. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்றே நிறைவேற்றுங்கள், நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், தொகுதி மறுசீரமைப்பை இப்போதைக்குத் தள்ளி வையுங்கள். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நிதானமாகச் செயல்படுங்கள்.
சசி தரூர்
சசி தரூரின் 'அரசியல் பணமதிப்பிழப்பு' என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. பணமதிப்பிழப்பு எப்படிப் பொருளாதாரத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதேபோல அவசரத் தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும் என்பது அவரது கருத்தாக உள்ளது.. மகளிர் இட ஒதுக்கீடு என்ற இனிப்புக்குள், தொகுதி மறுசீரமைப்பு என்ற 'கசப்பு மாத்திரை' ஒளிந்திருப்பதாகவே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. பெண்களுக்குப் பதவி கொடுக்கிறதுல யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை... ஆனால் அதுக்காக தெற்கின் குரலை நசுக்கக் கூடாதுங்கிறது தான் சதி தரூரின் லாஜிக்!












Click it and Unblock the Notifications