மரண தண்டனை விதித்த வங்கதேச தீர்ப்பாயம்.. இந்தியாவில் இருந்தபடி ஷேக் ஹசீனா வெளியிட்ட பரபர அறிக்கை
டெல்லி: மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சூழலில் இது குறித்து ஷேக் ஹசீனா தனது தரப்பு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் நோக்கத்த்டன் வழங்கப்பட்ட தீர்ப்பு என ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறையின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டதும் சுட உத்தரவிட்டது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனையை வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

ஷேக் ஹசீனா பதில்
கடந்த ஆண்டு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் ஷேக் ஹசீனா. ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்த ஷேக் ஹசீனா தற்போது வரை இங்குதான் உள்ளர். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.
எனினும், இது தொடர்பாக இந்தியா எந்த வித பதிலும் அளிக்கவில்லை. தனக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தனது அதரவாளர்களுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை ஷேக் ஹசீனா அனுப்பியிருந்தார். அதில், "தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இதுபோன்ற தீர்ப்புகளைப் பற்றி தான் கவலைப்படவில்லை.
ஆணவ நோக்கத்தோடு
முகம்மது யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசு தனது அவாமி லீக் கட்சியை அழிக்க நினைக்கிறது. ஆனால், அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அவாமி லீக் கட்சி அடித்தளத்தில் இருந்து எழுந்த கட்சி" என்று கூறியிருந்தார். தீர்ப்பில் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனா, பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் ஆணவ நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது"என்று கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரிக்கிறேன்
இது தொடர்பாக ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வங்கதேசத்தில் தற்போதைய நிர்வாகம் மீது அனுதாபம்தான் ஏற்படுகிறது. எனக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்.
ஆனால் நானோ அல்லது பிற அரசியல் தலைவர்களோ போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிடவில்லை. தீர்ப்பாயத்தில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க எனக்கு நியாயமான எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனது விருப்பப்படி வழக்கறிஞர்கள் என்னைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் கூட அனுமதிக்கப்படவில்லை. பெயரில் சர்வதேசம் என்று இருந்தாலும் தீர்ப்பாயத்திற்கு சர்வதேச தொடர்பு எதுவும் இல்லை. பாரபட்சமற்றதும் இல்லை.
யூனுஸ் அரசுக்கு சவால் விடுக்கிறேன்
வன்முறை மிக்க பிற்போக்குத்தனமான முகம்மது யூனுஸ் நிர்வாகத்தால் வங்கதேச மக்களை முட்டாளாக்க முடியாது. நீதியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை. மாறாக, அவாமி லீக்கை பலிகடா ஆக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
முறையான தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுக்களை ஹாக்கில் உள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நான் முகம்மது யூனுஸ் அரசுக்கு சவால் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications