இங்கிலாந்தில் 'அகதியாக' தஞ்சம் கோருகிறாரா ஷேக் ஹசீனா? மகன் வெளியிட்ட புதிய தகவல் என்ன?
டெல்லி: இந்தியாவில் அடைக்கலமாகியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இங்கிலாந்து உள்ளிட்ட எந்த ஒரு நாட்டிடமும் இதுவரை 'அகதியாக' அடைக்கலம் கேட்கவில்லை என அவரது ஆலோசகரும் மகனுமான சஜீப் வாஜித் ஜாய் தெரிவித்துள்ளார். இதனால் ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
வங்கதேசத்தில் வன்முறை கும்பலின் வெறியாட்டம் உச்சகட்டத்தை எட்டியதால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவரது மாளிகையையும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் உயிருக்கு அஞ்சி இந்தியாவுக்கு தப்பி ஓடிவந்தார் ஷேக் ஹசீனா.

வங்கதேசத்தில் இருந்து அருகே உள்ள இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்தலாவுக்கு முதலில் சென்றார் ஷேக் ஹசீனா. பின்னர் இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள் பாதுகாப்புடன் டெல்லி அருகே உள்ள காசியாபாத் விமானபடை தளத்துக்கு ஷேக் ஹசீனா அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள ஷேக் ஹசீனாவின் ஆலோசகரும் அவரது மகனுமாகிய சஜீப் வாஜித் ஜாய், இங்கிலாந்தில் ஷேக் ஹசீனா அகதியாக தஞ்சம் அடைவார் என்கிற செய்திகளில் உண்மை இல்லை. ஏனெனில் இதுவரை நாங்கள் அதுபற்றி விவாதிக்கவும் இல்லை. எந்த ஒரு நாட்டிடமும் தஞ்சமும் கேட்கவில்லை.
வங்கதேசத்தில் நேர்மையான ஆட்சியை 16 ஆண்டுகள் கொடுத்தவர் ஷேக் ஹசீனா. தற்போது 77 வயதாகும் நிலையில் தமக்கு எதிரான வன்முறைகளால் அதிர்ச்சி அடைந்துள்ளார். வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வங்கதேசத்தின் முகத்தையே மாற்றியவர் ஷேக் ஹசீனா என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications