பேனட்டில் தொங்கிய நபர்..3 கிமீ இழுத்து சென்ற எம்பியின் கார்..டெல்லியில் ஷாக்..மடக்கி பிடித்த போலீஸ்
டெல்லி: தலைநகர் டெலிலியில் நேற்று இரவு 11 மணியளவில் எம்.பி ஒருவர் எஸ்.யூவி ரக காரின் முன்பக்கம் (பேனட்) நபர் ஒருவர் தொங்கிக் கொண்டு இருக்கும் படி சென்றுகொண்டிருந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். டெல்லியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் விவரம் வருமாறு:-
காரின் பேனட்டில் ஒருவர் தொங்கியபடி இருக்க காரை ஒருவர் ஓட்டி செல்வதாக எங்களுக்கு நள்ளிரவு 12.12 மணியளவில் அழைப்பு வந்தது. அதையடுத்து விரைந்து சென்று காரை மடக்கி பிடித்தோம். காரில் தொங்கிக் கொண்டிருந்த சேத்தன் மீட்கப்பட்டார்.

அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை. இருவரையும் பிடித்து விசாரித்தோம். டேக்சி ஓட்டுநரான சேத்தன் தனது டேக்சியில் ஆஷ்ரம் சவுக் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த எஸ்.யூ.வி டிஸ்கவரி காரில் மோதியுள்ளது. உடனடியாக எஸ்.யூ.வி காரை நிறுத்த சேத்தன் முயற்சித்து இருக்கிறார்.
ஆனால் எஸ்.யூ.வி காரை ஓட்டி வந்த ராமச்சல் (வயது 35) அங்கிருந்து காருடன் தப்பி ஓட முயற்சித்து இருக்கிறார். அவரை விடக்கூடாது என்று காரை மறித்து இருக்கிறார். ஆனால், காரை எடுத்து செல்ல முற்பட்டதால் காரின் பேனட்டை பிடித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து காரை நிறுத்தாமல் ரமச்சல் காரை ஒட்டிச்சென்று இருக்கிறார்.
இப்படி கிட்டத்தட்ட 3 கி.மீட்டர் தொலைவிற்கு ஓட்டி சென்று இருக்கிறார். இறுதியில் போலீசார் வந்து சேத்தனை மீட்டனர். பாதிக்கப்பட்ட நபர் சேத்தன் அளித்த புகாரின் பேரில் எஸ்.யூ.வி காரை ஓட்டிவந்தவர் மீது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார்.

டெல்லியில் டாக்ஸி ஓட்டுநரை பேனட்டில் தொங்க விட்ட படி வந்த கார், எம்.பி வீணா தேவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்றொரு எம்.பியான சந்தன் சிங் வசம் உள்ளது. அவர்தான் இந்த காரை பயன்படுத்தி வந்துள்ளார். டெல்லியில் எம்.பியை இறக்கிவிட்டு எம்.பியின் கார் ஓட்டுநர் பீகாருக்கு புறப்பட்டுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
காரை ஓட்டி வந்த ரமச்சல் தன்னிடம்தான் பணியாற்றி வருவதாகவும் இந்த நிகழ்வை கேள்விபட்டதும் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் எம்.பி சந்தன் சிங் தெரிவித்துள்ளார். பீகாரை சேர்ந்த எம்.பி சந்தன் சிங் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications