"இனி நான் உங்க பொண்ணே இல்லை!" பெற்றோரை தூக்கி எறிந்த சாரதா, 35 துண்டுகளாக காதலனால் வெட்டப்பட்ட சோகம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் காதலியை அப்தாப் அமீன் என்ற இளைஞர் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாகக் கொன்ற நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது பெற்றோரின் அறிவுரையை கேட்காமல் காதலன்தான் முக்கியம் என காதலி கிளம்பி சென்று காதலனோடு தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் மெஹ்ராவுளி என்ற பகுதியில் அப்தாப் அமீன் என்ற இளைஞர் வசித்து வந்தார். அவருடன் 26 வயது நிரம்பிய சாரதா என்ற பெண்ணும் லிவ் இன் ரிலேஷன்ஷிபில் வாழ்ந்துள்ளனர்.
இதில் சாரதா மும்பையைச் சேர்ந்தவர். அப்தாப் அமீன் மும்பையில் இருந்த போது டேட்டிங் ஆப் மூலம் இருவரும் அறிமுகமாகி உள்ளனர். விரைவில் அது காதலாகவும் மாறியுள்ளது.

லிவ் இன்
இதையடுத்து அவர்கள் மும்பையிலேயே லிவ் இன்-இல் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர். இருப்பினும், இதற்குச் சாரதாவின் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளனர். அங்கு மெஹ்ராவுளி என்ற பகுதியில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே அமீனை திருமணம் செய்து கொள்ளச் சாரதா நினைத்துள்ளார்.

கொடூர கொலை
இருப்பினும், அமீனுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை எனக் கூறப்படுகிறது. சாராத எப்போதெல்லாம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறாரோ அப்போதெல்லாம் அந்த பேச்சைத் தவிர்த்துள்ளார் அமீன். அடிக்கடி திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதால் ஆத்திரமடைந்த அமீன் சாரதாவை கடந்த மே 18இல் கொலை செய்தார். அதன் பிறகு அவர் செய்த காரியம் தான் கொடூரத்தின் உச்சம்.

35 பாகங்கள்
சாரதாவை கழுத்தை நெரித்து கொலை செய்த அமீன், அவரது உடலை 35 பாகங்களாக வெட்டி இருக்கிறார். அதைத் தனது வீட்டின் பிரிட்ஜில் வைத்த அமீன், அடுத்த சில நாட்களில் டெல்லியில் இருக்கும் பல இடங்களில் சாரதாவின் உடல் பாகங்களை வெளியே போட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் தினமும் இரவு 2 மணிக்கு சாரதாவின் உடற்பாகங்களை அவர் வெளியே எடுத்துப் போட்டுள்ளார்.

தந்தை
இதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த கொலை நடந்த போதிலும் போலீசார் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் சாரதா வழக்கமாக எதையாவது அப்டேட் செய்து கொண்டே இருப்பார். ஆறு மாதங்களாக எதுவுமே போடாததால் சந்தேகப்படு அவரது தந்தை போன் செய்துள்ளார். கால் போகாத நிலையில் தான், அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வேண்டாம் என்றோம்
இந்தச் சம்பவத்தில் கொலையாளி அமீன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து சாரதாவின் தந்தை விகாஸ் வாக்கர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார். அதாவது, "எனது மகள் சாரதா கடந்த 2019இல் என் மனைவியிடம் அமீன் உடன் லிவ்இன் உறவில் இருக்க விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், எங்கள் குடும்பத்தில் யாரும் இப்படி இருந்தது இல்லை. இதனால் நாங்கள் சரதாவின் முடிவை ஏற்கவில்லை.

தூக்கி எரிந்த காதலி
நாங்கள் சண்டை போட்டும் அவர் கேட்கவில்லை. அப்போது எனது மகள் சாரதா எங்களிடம் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. சாரதா எங்களிடம், 'எனக்கு இப்போது 25 வயதாகிறது.. எனது வாழ்க்கைக்கு என்ன வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. நான் அஃப்தாப் அமீன் உடன் லிவ்-இன் உறவில் வாழப் போகிறேன். இன்றில் இருந்து நான் உங்க பொண்ணே இல்லை. என்னை மறந்திடுங்க' என்று சொல்லிவிட்டு சாரதா எங்களை விட்டுச் சென்றார்" என்றார்.

ஷாக் சம்பவம்
நாட்டையே அதிர வைக்கும் இந்தச் சம்பவம் பல கிரைம் திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் இருக்கிறது. தனது காதலியைக் கொல்லும் முன், அமீன் பிரபல அமெரிக்கா டெக்ஸ்டர் என்ற தொடரைப் பார்த்துள்ளார். அதைப் பார்த்துத் தான் உடலை அப்புறப்படுத்தி உள்ளார். இதற்காகத் தனியாக பிரிட்ஜையும் கூட அமீன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது..












Click it and Unblock the Notifications