இந்தியாவுக்கு பதிலடியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு கனடா தடையா? உண்மை என்ன?
டெல்லி: இந்தியாவுக்கு பதில் தரும் வகையில் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு கனடா தடை விதித்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தீயாக பரவும் தகவல் வதந்தி என உறுதியாகி உள்ளது.
இந்தியா- கனடா இடையேயான உறவில் பெரும் சிக்கல் உருவாகி உள்ளது. கனடாவில் சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். காலிஸ்தான் புலிப் படை என்ற பெயரில் இந்தியாவில் சீக்கியர்களுக்கான தனி நாடு -காலிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து இந்த அமைப்பை நிஜ்ஜார் நடத்தி வந்தார்.

நிஜ்ஜார் விவகாரம்: 1990களில் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிஜ்ஜார் ஜாமீனில் விடுதலையாகி கனடாவுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நிலையில் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். ஆனால் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என கனடா பகிரங்கமாக குற்றம் சாட்டியது. அத்துடன் கனடாவுக்கான இந்திய தூத்ர அதிகாரியையும் அந்நாட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. இதற்கு நமது மத்திய அரசும், இந்தியாவில் இருந்து கனடா தூதரக மூத்த அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இதனைத் தொடர்ந்து கனடாவில் வசிக்கும் இந்துக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டு சீக்கிய பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசும் அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
கனடாவில் ஆர்.எஸ்.எஸ். தடை?: இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கனடா அரசு அதிகாரப்பூர்வமாக தடை செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுவரை கனடா அரசு அதிகாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு தடை விதித்ததாக அறிவிக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ். தடையா? உண்மை என்ன?: அதே நேரத்தில் கனடாவை சேர்ந்த முஸ்லிம் கவுன்சில் ஒன்றுதான், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அந்நாட்டில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும் கனடாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படியான இந்துத்துவா செயல்படுகளில் ஈடுபடுகிறது என்பதையும் அந்த கவுன்சில் பட்டியல் போட்டு விவரித்துள்ளது. இதனடிப்படையிலேயே கனடாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டுவிட்டது என்கிற வதந்தி காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications