வெள்ளி வளையலுக்காக.. மூச்சிரைக்க சுடுகாட்டுக்கே ஓடிவந்த மகன்.. தாயின் விறகு கட்டை மீது ஏறி புரண்டு?
ஜெய்ப்பூர்: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சவரன் ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.8,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையும் உச்சத்துக்கு எகிறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு வெள்ளி வளையலுக்காக சுடுகாட்டில் மகன் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது விராட் நகர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பூரி தேவி, 80.. இவருக்கு மொத்தம் 7 மகன்கள். இதில் மூத்த மகன் கிர்தாரி லால் வீட்டில் பூரி தேவி தங்கி வந்தார்..

வெள்ளி வளையல்
கிரிதாரி லாலும் தன்னுடைய தாயை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். இதில் 5வது மகனான ஓம் பிரகாஷ் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில, வயது மூப்பு காரணமாக பூரி தேவி உயிரிழந்தார்... இதனால் அவரிடமிருந்த நகைகள் மூத்த மகன் கிர்தாரி லாலிடம் ஒப்படைக்கப்பட்டன... அத்துடன், பூரி தேவியின் வெள்ளி வளையல் ஒன்றும் மூத்த மகனிடமே ஒப்படைக்கப்பட்டன.. இந்த வளையில் சில ஆயிரம் ரூபாய் மதிப்பிலானது என தெரிகிறது.
இறுதிச்சடங்கு தாமதம்
பிறகு, பூரிதேவியின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சுடுகாட்டிற்கு 5வது மகன் ஓம் பிரகாஷ் ஓடிவந்தார்.. தாயின் வெள்ளி வளையல்களை தன்னிடம் தான் தர வேண்டும் என்று தகராறு செய்தார்.. ஆனால் குடும்பத்தினர் அனைவரும் இறுதிச்சடங்கு மும்முரத்தில் ஈடுபட்டிருந்தனர்..
இதனால் ஆத்திரமடைந்த ஓம் பிரகாஷ், தாயின் உடலை எரிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகள் மீது ஏறி படுத்துக் கொண்டார்."என் அம்மாவின், வெள்ளி வளையலை எனக்கு தராவிட்டால், அம்மாவுடன் சேர்த்து என்னையும் எரித்துவிடுங்கள்" என்று கதறினார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகன், உடனடியாக வீட்டுக்கு சென்று, வெள்ளி வளையல்களை எடுத்து வந்து ஓம் பிரகாஷிடம் கொடுத்தனர்.
பரபரப்பு வீடியோ
அதன்பிறகே விறகு கட்டையிலிருந்து கீழே இறங்கி, இறுதிச் சடங்கை நடத்தவும் அனுமதித்தார் ஓம் பிரகாஷ்.. இதனால் இறுதிச் சடங்கு 2 மணி நேரம் தாமதமானது. சுடுகாட்டில் நடந்த இந்த தகராறை அங்கிருந்த ஊர்க்காரர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிடவும், அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications