இனி இஷ்டத்துக்கு சிம் கார்டு வாங்க முடியாது.. கடிவாளம் போட்ட மத்திய அரசு.. அதிரடி நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஒருவர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய சிம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை மத்திய அரசு தீவிரமாக அமல்படுத்த உள்ளது. அதன்படி ஒருவர் அதிகபட்சம் 9 சிம்களை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்க முடியும். இந்த வரம்பை எட்டிய நபர்களுக்கு புதிய சிம் கார்டுகளை வழங்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நம்மில் சிலர் இஷ்டத்திற்கு புதிய சிம் கார்டுகளை வாங்கி குவிப்பார்கள். சிம் கார்டு புதிதாக வாங்கும்போது அதில் நிறைய ஆஃபர்கள் வரும். அந்த ஆஃபர்களை பயன்படுத்த சிம் கார்டுகளை வாங்கிக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிம் கார்டை வாங்கி, அதில் ஆஃபர்களை பயன்படுத்திவிட்டு, ஆஃபர் முடிந்தவுடன் அதை தூக்கி எரிந்துவிட்டு புதிய சிம் வாங்குவார்கள்.

SIM Card Limit in India India Sim Telecom

இஷ்டத்திற்கு வாங்க முடியாது

ஆனால், இனிமேல் இதுபோல இஷ்டத்திற்கு சிம் கார்டுகளை வாங்க முடியாது. ஏனென்றால் சிம் கார்டு விவகாரத்தில் உச்சவரம்பை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. அதாவது ஒருவரால் இனிமேல் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும். ஏற்கனவே அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியவர்களுக்கு ஆகஸ்ட் 24 முதல் புதிய சிம் கார்டுகளை வழங்கக் கூடாது என மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை டெலிகாம் துறை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட்டது. அதில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி புதிய சிம் கார்டுகளை பெற முயலும் வாடிக்கையாளர்களை அடையாளம் காண தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

9 சிம் கார்டுகள்

இந்தியாவில் ஒருவர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை வைத்திருக்க முடியும். இந்த விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், தற்போது அதனை கடுமையாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகளை மட்டுமே தங்கள் பெயரில் வைதிருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

புதிய சிம் கார்டு வாங்கும் போது, அந்த நபரின் பெயரில் ஏற்கனவே எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும். வேறு நிறுவனத்திடம் பெற்றுள்ள சிம் கார்டுகள் மற்றும் வேறு நெட்வொர்க்கில் உள்ள இணைப்புகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, வாடிக்கையாளரும் தங்கள் பெயரில் ஏற்கனவே உள்ள சிம் கார்டுகளின் விவரங்களை வாடிக்கையாளர் படிவதில் குறிப்பிட வேண்டும்.

எப்படி கண்காணிப்பார்கள்?

இதற்காக மத்திய அரசின் டிஐபி எனப்படும் Digital Intelligence Platform பயன்படுத்த உள்ளது. இதில் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வாடிக்கையாளர் விவரங்கள் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் ஒருவரின் பெயரில் ஏற்கனவே எத்தனை சிம் இணைப்புகள் உள்ளன என்பதை புதிய சிம் வழங்கும் முன்பே டெலிகாம் நிறுவனங்கள் சரிபார்க்க முடியும்.

வரும் ஆகஸ்ட் 23 முதல் அனுமதிக்கப்பட்ட சிம் லிமிட்டை எட்டியுள்ள நபர்களின் போட்டோவை டிஐபி தளத்தில் காண்பிக்கும் வசதி அறிமுகமாகிறது. மேலும், ஒருவர் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை எட்டியிருப்பது கண்டறியப்பட்டால், அவருக்கு புதிய சிம் வழங்கப்படாது.

ஒரே நாளில் முடக்கப்படும்

அனுமதிக்கப்பட்ட வரம்பை தாண்டி ஒருவருக்கு தெரியாமல் சிம் கார்டு வழங்கப்பட்டால்.. அந்த இணைப்பு உடனடியாக முடக்கப்படும். விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டிஐபி தளத்துடன் தங்களது நடைமுறைகளை முழுமையாக ஒருங்கிணைத்து செயல்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் தனது பெயரில் வைத்திருக்கும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை லிமிட்டிற்குள் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+