டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரசம்னாலே டென்ஷன் ஆகிறவரா நீங்க.. வாய்ல அடிங்க.. சிங்கப்பூர்ல செம கிராக்கியாம்.. காரணம் கொரோனா!

Google Oneindia Tamil News

டெல்லி: ரசம் எப்படி தயாரிப்பது என சிங்கப்பூர்வாசிகள் தமிழர்களை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க ரசம் சாப்பிடும்படி சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன.

Recommended Video

    Corona outbreak: கொரோனா வராமல் தடுக்க உ.பி.முதல்வர் கொடுத்த ஐடியா

    சீனாவில் வுகான் மாகாணத்தில் மீன் சந்தையிலிருந்து உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் உலக நாடுகளே மிரளும் அளவுக்கு பரவி வருகிறது.

    இதை குணப்படுத்த மருந்து ஏதும் இல்லை. எனவே இந்த வைரஸ் நோய் பரவுவதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள 60-க்கும் மேற்பட்ட நாடுகள் போராடி வருகின்றன.

    பாரம்பரிய உணவு

    பாரம்பரிய உணவு

    ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி எந்த மூலிகையால் இந்த வைரஸ் நோய் அழியும் என்பது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவின் பாரம்பரிய உணவு வகையான ரசத்திற்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறப்படுகிறது.

    பாக்கெட் ரசம்

    பாக்கெட் ரசம்

    கூல்டிரிங்ஸ், ஜூஸ்களை போல் ரசங்களையும் பாக்கெட்டுகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள கடைகளின் வெளியே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியர்கள் 5000 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்திற்கு நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது. குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரசம் சாதமே வழங்கி வந்துள்ளது.

    எதிர்ப்பு சக்தி

    எதிர்ப்பு சக்தி

    இந்த ரசத்தில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் சேர்க்கப்படுவதால் செரிமானத்திற்கு சிறந்ததாக உள்ளது. வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. வைட்டமின், மினரல்களை கொண்டது. எனவே ரசத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். நுரையீரல் மற்றும் வயிற்றில் உள்ள கோளாறுகளை குணப்படுத்தும். உடல் எடையையும் கட்டுப்படுத்தும் என பதாகைகளில் போடப்பட்டுள்ளது.

    ரசம் வைப்பது எப்போது

    ரசம் வைப்பது எப்போது

    தினமும் பாக்கெட் ரசங்களை வாங்கி கட்டுப்படி ஆகாததால் அங்குள்ள தமிழர்களிடம் சிங்கப்பூர்வாசிகள் ரசம் வைக்கும் செய்முறை விளக்கத்தை கற்று வருவதாக கூறப்படுகிறது. யூடியூப் வலைதளங்களிலும் ரசம் வைப்பது குறித்து தேடி வருகின்றனர். இதனால் ரசத்திற்கு கிராக்கி அதிகரித்துள்ளது. மேலும் கடைகளில் ரசப்பொடிகள் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

    English summary
    Singapore people asks the receipe of Rasam from Tamil people as it is the medicine to cure Corona like virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X