டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாய் அன்பிற்கு ஈடேது...அன்னையர் தினத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

Google Oneindia Tamil News

டெல்லி : ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு உறவு தாய். இன்றைய எந்திர மயமான வாழ்க்கையில் அன்னையின் பெருமையை பற்றி அனைவரும் உணர செய்யும் கையில் ஆண்டுதோறும் மே இரண்டாவது வாரத்தில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 9 ஆன இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்புமின்றி குழந்தைகளிடம் அளவற்ற அன்மை காட்டி, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் அனைத்தையும் தியாகம் செய்பவள் தாய். குழந்தைக்கு பாலூட்டி வளர்ப்பதில் துவங்கி, ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து குழந்தையை வளர்ப்பது வரை ஒவ்வொன்றிலும் அன்னையின் பங்குண்டு.

என்னய்யா நாடு இது? 2 வார லாக்டவுன் எதிரொலி- ஒரே நாளில் ரூ426 கோடிக்கு மது விற்பனை-டாப் 1-ல் சென்னை! என்னய்யா நாடு இது? 2 வார லாக்டவுன் எதிரொலி- ஒரே நாளில் ரூ426 கோடிக்கு மது விற்பனை-டாப் 1-ல் சென்னை!

தற்போது ஆண்டுதோறும் நாம் கொண்டாடும் அன்னையர் தினம் எப்படி உருவாக்கப்பட்டது, அதன் பின்னணியில் இருக்கும் வரலாறு பற்றி தான் இங்கு பார்க்க உள்ளோம்.

அன்னை தின வரலாறு

அன்னை தின வரலாறு

தற்போது நாம் கொண்டாடும் அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவில் தான் துவங்கப்பட்டது. அன்னா ஜார்விஸ் என்ற பெண், தனது தாயின் ஆசையை நிறைவேற்ற, அன்னையர் தினத்தை கொண்டாட முடிவு செய்தார். தனது தாயின் மரணத்திற்கு பிறகு அன்னையர் தின கொண்டாட்டத்திற்கான வேலைகளை துவங்கினார்.

தாயின் மரணத்திற்கு பின்

தாயின் மரணத்திற்கு பின்


தாய் இறந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 1908 ல் தனது தாயின் நினைவாக மேற்கு விர்ஜினியாவில் உள்ள புனித ஆன்டிரீவ்ஸ் தேவாலயத்தில் அன்னையர் தினத்தை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஜார்விஸ் டெலிகிராம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

கடிதத்தில் தாயின் பெருமை

கடிதத்தில் தாயின் பெருமை

அதில் இந்த நாள் பற்றிய முக்கியத்துவத்தை ஜார்விஸ் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் 500 வெள்ளை நிற பூக்களையும் அனுப்பி இருந்தார். தனது தாய் பற்றிய நினைவுகளையும் அந்த டெலிகிராம் மூலம் ஜார்விஸ் பகிர்ந்திருந்தார். இதனை பின்ற்றியே இன்று வரை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 மற்ற நாடுகளில் எப்படி

மற்ற நாடுகளில் எப்படி

ஆனால் ஐரோப்பாவில் மார்ச் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை தான் அன்னையர் தினம் கொண்டாடப்படும். அதனால் இது தாய்மை ஞாயிறு என அழைக்கப்படுகிறது. அதே சமயம் கிரீஸ் நாட்டில் பிப்ரவரி 2 ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசுநாதர் உலகிற்க தந்த நாளான இதனை தொடர்புபடுத்திக் கொண்டாடுகிறார்கள்.

லாக்டவுனில் உங்க பிளான் என்ன

லாக்டவுனில் உங்க பிளான் என்ன

அன்னைறய தினம் மக்கள் தங்களின் அன்பு, மரியாதை, நேர்மை ஆகியவற்றை தங்களின் தாய்க்கு எடுத்துக்காட்டும் தினமாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போது உலகின் பல பகுதிகளில் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடபப்ட்டுள்ள நிலையில், இந்த அன்னையர் தினத்தை சிறப்பாக, வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

English summary
Every year, Mother’s Day is celebrated to appreciate mothers, who play an immensely important role in one’s life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X