சுதந்திரமில்லை.. தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை நடத்துகிறது! லோக்சபாவில் ராகுல் அட்டாக்
டெல்லி: பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை பலவீனமாக்கி உள்ளது. ஒவ்வொரு அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது. தேர்தல் சார்ந்த சிசிடிவிகள் தொடர்பான சட்டம் ஏன் மாற்றப்பட்டது? தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தை அனுமதிக்கும் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது? அதற்கான அவசியம் என்ன? இது 'தேர்தல் திருட்டு' தொடர்பான விஷயம்," . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது'' என ‛சார்' தொடர்பான விவாதத்தில் ராகுல் காந்தி லோக்சபாவில் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை பற்றிய விவாதம் தொடங்கியது. நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.

குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம், பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:
பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை பலவீனமாக்கி உள்ளது. நான் 3 கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை அரசு மீட்டெடுக்குமா ? பல மாநிலங்களிலிருந்து வரும் புகார்களுக்கு மத்தியில், SIR செயல்முறையின் போது வாக்காளர் பட்டியல்களில் மோசடிகளைத் தடுக்க என்ன பாதுகாப்புகள் எடுக்கப்பட்டுள்ளன? தேர்தல் ஆணையத்தின் நியமனங்களும் முடிவுகளும் அரசியல் நலன்களுடன் அதிகரித்துள்ள நிலையில் வெளிப்படையான சீர்த்திருத்தங்களுக்கு அரசு உறுதியளிக்குமா'' என்று 3 கேள்விகளை ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், ‛‛இந்தியாவின் நிறுவனங்கள் கைப்பறப்பட்டுள்ளன என் நான் நான் கூறுகிறேன். அதேபோல் தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற புள்ளிக்கு நான் வருவேன். நாட்டின் நிறுவனங்களின் கட்டமைப்புகளை கைப்பற்றுவது தான் ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கமாகும்.
கல்வித்துறையில் குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் நியமனங்கள் உள்ளன. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றில் தங்களின் சித்தாந்தங்களை கொண்டவர்களை நியமித்து எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல்சார்ந்த சிசிடிவிகள் தொடர்பான சட்டம் ஏன் மாற்றப்பட்டது? தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தை அனுமதிக்கும் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது? அதற்கான அவசியம் என்ன? இது 'தேர்தல் திருட்டு' தொடர்பான விஷயம்," . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய ஹரியானா சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் 22 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இன்னொரு வாக்குச்சாவடியில் ஒரு பெண்ணின் பெயர் 200 முறை இடம்பெற்றுள்ளது.. ஹரியானா தேர்தல் திருடப்பட்டது என்பதையும், இது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டது என்பதையும் நான் தெளிவாக காட்டி உள்ளேன்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications