மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல பிரமுகர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! SIR எபெக்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கையில் முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக கூறி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட், டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா, முன்னாள ராணுவ தலைமை தளபதி உபேந்திர திரிவேதி, மாஜி உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் உள்ளிட்டவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.

sir-notice-issued-to-union-minister-jaishankar-ex-army-chief-upendra-dwivedi-and-several-serving-ia

டெல்லியில் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மீது அக்டோபர் 31ம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி முகவரி மாறியவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவானவர்கள் என 47.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 97.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு பிரமுகர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது மனைவி கியாகோ ஜெய்சங்கர், டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் மற்றும் குடும்பத்தினர், முன்னாள் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திரிவேதி மற்றும் அவரது மனைவி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் மற்றுமு் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தற்போது பணியில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட், சுகாதாரத்துறை செயலாளர் புன்யா சாலிலா, மீன்வளத்துறை செயலாளர் அபிலாக்‌ஷ் லிகி, உரத்துறையின் செயலாளர் ரஜத் குமார் , நில வளத்துறை செயலாளர் நரேந்திர பூஷன் உள்ளிட்டவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது அவர்களின் பெயர் பட்டியலுடன் தற்போதைய விவரங்களை இணைக்க முடியாமல் போனாலோ அல்லது முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது அவரது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் முரண்பாடுகள் இருந்தாலோ இத்தகைய நோட்டீஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தான் இவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் உரிய முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் தொடர்ந்து இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+