Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உடல் மண்ணுக்கல்ல, அறிவியலுக்கு”.. உடல் தானம் செய்த இடதுசாரிகள் லிஸ்ட்டில் இணைந்த சீதாராம் யெச்சூரி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல், மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. இடதுசாரி தலைவர்கள், மறைந்த பின்னும் தங்கள் உடல் சமூகத்திற்குப் பயனளிக்க வேண்டும் எனக் கருதி உடல் தானம் செய்து வருகின்றனர். வாழும் காலத்தில் மண்ணுக்கும், மக்களுக்காகவும் உழைக்கும் தலைவர்களின் உடல், மறைந்த பின்னும் பயனளிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி. மாநிலங்களவை உறுப்பினராகவும், கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தவர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

sitaram yechury cpm delhi

சீதாராம் யெச்சூரி உடல் தானம்: சீதாராம் யெச்சூரி மறைந்த செய்தி இடதுசாரி அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர், இடதுசாரிகள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த சீதாராம் யெச்சூரி உடலை அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று (செப்.12) பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அவரது உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழும் போதும், மறைந்த பிறகும் மக்களுக்காக: அறிவியலுக்கு தனது உடலை தானம் செய்ததன் மூலம், கடந்த காலங்களில் உடல் தானம் செய்த இடதுசாரி தலைவர்களின் நீண்ட பட்டியலில் சீதாராம் யெச்சூரியும் இணைந்துள்ளார். வாழும் காலத்தில் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கும் தலைவர்கள், மறைந்த பிறகும் கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மாணவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன்படுகின்றனர்.

புத்ததேவ் பட்டாச்சார்யா: கடந்த மாதம் 80 வயதில் மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், சிபிஐ(எம்) தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாயின் உடல் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. புத்ததேவ் பட்டாச்சார்யா, 2006 மார்ச்சில் இறப்புக்குப் பின்னர் தனது உடலை கணதர்பன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஜோதிபாசு: 34 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்தார் ஜோதிபாசு. கடந்த ஏப்ரல் 2003 இல் அவர் தனது உடலை தானம் செய்வதாக அறிவித்தார். கடந்த 2010 இல் அவர் இறந்த பிறகு கொல்கத்தாவின் SSKM மருத்துவமனைக்கு ஜோதி பாசு உடல் தானமாக வழங்கப்பட்டது.

சோம்நாத் சட்டர்ஜி: முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர். அவர் 2000 ஆம் ஆண்டில் தனது உடலை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்தார். 2018 இல் சோம்நாத் சாட்டர்ஜி இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் அவரது விருப்பத்தை நிறைவேற்றினர்.

முன்னாள் சிபிஐ(எம்) செயலாளர் அனில் பிஸ்வாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெனாய் சவுத்ரி ஆகியோர் தங்கள் உடலை தானம் செய்த சில இடதுசாரி தலைவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு தானம் செய்யப்படும் உடல்கள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளால் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவியலை மேம்படுத்த உதவுகின்றன, எதிர்கால மருத்துவர்கள் மனித உடற்கூறியல் மற்றும் மருத்துவர்கள் புதிய அறுவை சிகிச்சை முறைகளை உருவாக்க தானம் செய்யப்பட்ட இந்த உடல்கள் பயன்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+