Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அமைச்சர்களான 6 Ex முதல்வர்கள்! அப்ப அந்த 2 Ex ? இது என்ன கொடுமை சரவணன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

Rajnath Singh Shivraj Singh Chouhan Manohar Lal Khattar HD Kumaraswamy

நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் மீண்டு மோடி பிரதமராகி உள்ளார்.

நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முறைப்படி மோடிக்குப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் இலங்கை அபதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிஃப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' மற்றும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே என ஏழு வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

'மோடி 3.0' அமைச்சரவையில் கிட்டத்தட்ட ராஜ்நாத்சிங், சிவராஜ் சிங் சவுகான் உட்பட ஆறு முன்னாள் முதல்வர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளனர் என்பது ஹைலைட் ஆன தகவலாகக் கருதப்படுகிறது.

ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து 71 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ரகசிய காப்புப் பிரமாணமும் பதவிப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

இந்த மத்திய அமைச்சர்கள் குழுவில் சில முன்னாள் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ராஜ்நாத்சிங்:

ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் ஆவார். இவர் லக்னோ நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.

மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். இரண்டாவதாக 2019இல் மோடி பிரதமரான போது பாதுகாப்புக்கு அமைச்சராக இருந்தார்.

இப்போது நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் 612709 வாக்குகளைப் பெற்று, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை 135159 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இவரது வெற்றிக்குப் பகுஜன் சமாஜ் பார்டி மறைமுகமாக உதவி செய்துள்ளது. அதாவது இந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டதால், அது பாஜகவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் முகமது சர்வர் மாலிக் 30192 வாக்குகளைப் பிரித்துவிட்டார். இந்த ஓட்டுகள் இந்தியா கூட்டணியிலிருந்த சமாஜ்வாதிக்கு கிடைத்திருந்தால், ராஜ்நாத்சிங் தோல்வியைச் சந்தித்திருப்பார்.

ராஜ்நாத்சிங், 2003இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே மத்திய வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். அதற்கு முன்னதாக 1999இல் அதே வாஜ்பாய் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர்.

இன்னும் சொல்லப்போனால், மோடி பிரதமராகுவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சரவையிலிருந்த சீனியர். உபி மாநிலத்தில் 19வது முதல்வராக இவர் 2000இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

தற்போது இவருக்கு 72 வயதாகிறது. பாஜகவின் கொள்கைப் படி 75 வயதுக்கு மேல் இவர், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவராஜ் சிங் சவுகான்:

பாஜகவினர் "மாமா" (தாய் மாமா) என்று அன்பாக அழைக்கப்படும் தலைவர் சவுகான். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர். இம்மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1116460 ஓட்டுகளை வாங்கி சாதனை செய்துள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 8 லட்சம், சரியாகச் சொன்னால் 821408 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் மோடிக்கு 72 வயதாகிவிட்டது. அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என சொன்னபோது, அந்தச் சர்ச்சையில் சவுகான் பெயர்தான் அடிப்பட்டது.

இவரது வயதைக் காரணம் காட்டித்தான் மத்தியப் பிரதேசம் முதல் அமைச்சர் பதவியிலிருந்து இவர் விலக்கப்பட்டார். ஆனால், இவருக்கு 65 வயதுதான் ஆகின்றது. இவரைவிட அதிகம் வயது கொண்டவர் மோடி. 72 வயது. எனவே அந்தச் சர்ச்சைக்கு எரிபொருளாக சவுகான் இருந்தார். இப்போது அவர் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

மனோகர் லால் கட்டார்:

ஹரியானா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வர் இவர்தான். கட்டார் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் போது தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் நயாப் சிங் சைனிக்கு வழி விட்டார்.

ஹரியானாவில் மொத்த 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் இந்த முறை பாஜகவும் காங்கிரசும் தலா 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

கட்டார் கர்னால் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 739285 வாக்குகளைப் பெற்று, காங்கிரஸ் வேட்பாளரை 232577 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவச் செய்துள்ளார்.

சர்பானந்த் சோனோவால்:

அசாமின் முதல் பாஜக முதல்வர் இவர். இவருக்கு அடுத்து 2021 இல் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு அசாம் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பின்னர் அவருக்கு மத்திய அமைச்சரவையில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை வழங்கப்பட்டது.

இப்போது மோடியின் 3.O அமைச்சரவையில் மீண்டும் தனது செல்வாக்கை உறுதி செய்துள்ளார்.

Rajnath Singh Shivraj Singh Chouhan Manohar Lal Khattar HD Kumaraswamy

எச்.டி.குமாரசாமி:

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி. இவர் பாஜக கூட்டணிக் கட்சியாக உள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கர்நாடகாவில் ஒரு காலத்தில் செல்வாக்கு உள்ள கட்சியாக இருந்தது. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் இவர். மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாகி இருக்கிறார்.

மாநிலத்தில் 2 தொகுதிகளை இவரது கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஜிதம் ராம் மஞ்சி:

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜிதம் ராம் மஞ்சி. இவர் கயா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெற்ற வாக்குகள் 494960. தனது போட்டிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளரை 101812 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். இவரது இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது.

கர்நாடகா பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, திரிபுரா முன்னாள் பிப்லப் தேப் ஆகியோர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+