பேசி பேசியே கிறங்கடித்து.. போனில் அழைத்து.. நேரில் மயக்கி.. நிர்வாணமாக்கி.. 6 பெண்கள் கைது!
இளைஞனை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த 6 பெண்கள் கைதானார்கள்
Recommended Video
டெல்லி: இளைஞனை பணத்துக்காக.. பேசி மயக்கி.. நெருக்கத்தை ஏற்படுத்தி.. தனிமையில் வரச்செய்து, கடைசியில் நிர்வாணமாக வீடியோ எடுத்து.. மிரட்டி உள்ளனர் 6 பெண்கள்! இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தாய்நாட்டின் தலைநகரம் டெல்லியில்தான் நடந்துள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு இளைஞருக்கு ஒரு பெண்ணின் தொடர்பு கிடைத்தது. அதனால் நட்பாக பேசி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் நெருக்கமானது.

இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், அந்த நபரை பார்க்க ஆசையாக இருப்பதாகவும், தனியாக சந்திக்க வேண்டும் என்றும் பெண் சொல்லி உள்ளார். அதற்கு அவரும் சரியென்று சொல்லி, பெண்ணை பார்க்க ஆசை ஆசையாக ஓடினார்.
ஒரு தனி இடத்துக்கு இளைஞரை வர சொல்லியிருந்தார் பெண். ஆவலுடன் வந்த நபரை, ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அந்த வீட்டில் சில பெண்கள் இருந்துள்ளனர். 2 ஆண்களும் இருந்துள்ளனர். அவர்களை மொத்தமாக பார்த்ததும் இளைஞருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, இளைஞரை மிரட்டி. ஆடைகளை கழட்டி.. நிர்வாணமாக வீடியோ எடுத்தனர்.
தங்களுக்கு 30 லட்சம் ரூபாய் தர வேண்டும், இல்லையானால் நிர்வாண வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். பயந்துபோன இளைஞரோ, தன்னால் 10 லட்சம்தான் தர முடியும் என்று சொல்லி, வீட்டுக்கு போய் பணம் எடுத்து வருவதாக சொல்லி அங்கிருந்து தப்பி விட்டார்.
நேராக ரோகிணி செக்டார் பகுதி போலீசாரிடம் சென்று புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இளைஞனை மிரட்டி நிர்வாணமாக்கிய 6 பெண்களை கைது செய்தனர்.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications