இனி ஸ்லீப்பர் பஸ்கள் விபத்தில் சிக்காது.. நிதின் கட்காரி கொண்டு வரும் புதிய சிஸ்டம்.. குட்நியூஸ்
டெல்லி: இரவு நேரங்களில் ஸ்லீப்பர் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்து அடிக்கடி கொத்து கொத்தாக மக்கள் பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் ஸ்லீப்பர் பஸ்களில் தீத்தடுப்பு சிஸ்டம், டிரைவர் தூங்கும்போது அலர்ட் செய்யும் கருவி உள்பட சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நீண்டதூர பயணத்துக்கு ஸ்லீப்பர் பஸ்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில் கிளம்பி இரவு நேரங்களில் பயணிக்கின்றன.
இந்த சமயத்தில் அடிக்கடி அதிகாலையில் ஸ்லீப்பர் பஸ்கள் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் ஸ்லீப்பர் பஸ்கள் விபத்தில் சிக்கி 145 பேர் பலியாகி உள்ளனர்.

இரவு நேரங்களில் பஸ்களில் பயணிகள் தூக்கத்தில் இருப்பதால் உயிர் பலி அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஸ்லீப்பர் பஸ்களில் விபத்தை குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுக்கிறது.
இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛சாலை விபத்துகளில் ஸ்லீப்பர் பஸ்கள் அதிகளவில் விபத்தில் சிக்கி உயிர் பலிகள் ஏற்படுகிறது. ஸ்லீப்பர் பஸ்கள் விபத்துகளில் சிக்கி ஏற்படும் உயிர் சேதத்தை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்படுகிறது.
அதன்படி தீ கண்டறியும் சிஸ்டம் (Fires detection Systems), சுத்தியல்களுடன் அவசரகால வெளியேறும் வழி (Emergency Exit), ஓட்டுநரின் சோர்வை எச்சரிக்கும் சிஸ்டமை (driver drowsiness alerts)பொருத்தப்பட உள்ளது.
இந்த அமைப்புகளுடன் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஸ்லீப்பர் பஸ்களை இனி தயாரிக்க வேண்டும். அதற்கு மட்டுமே மத்திய அரசு அங்கீகாரம் வழங்கப்படும். பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த வகையிலும் சமரசம் செய்யப்படுவது இல்லை.
ஏற்கனவே உள்ள ஸ்லீப்பர் பஸ்களில் தீ கண்டறியும் சிஸ்டம் (Fires detection Systems), சுத்தியல்களுடன் அவசரகால வெளியேறும் வழி (Emergency Exit), ஓட்டுநரின் சோர்வை எச்சரிக்கும் சிஸ்டமை (driver drowsiness alerts)பொருத்தப்பட வேண்டும்'' என்றார்.
இதில் Driver Drosiness Alerts என்பது சென்சார் அல்லது கேமராக்களை பயன்படுத்தி டிரைவர்களுக்கு அலர்ட் செய்யும் சிஸ்டமாகும். இதன்மூலம் கொட்டாவி விடுதல், கண்களை மூடுதல், கண்களை தேய்த்தல், ஸ்டீயரிங் அசைவில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவற்றை ‛நோட்' செய்து எச்சரிக்கை செய்யும். இதனால் விபத்து குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த முறை கடந்த 2024ம்ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளின் கார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications