டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம்.. டிவிட்டர் சிஇஓ ஜாக்கின் சர்ச்சை போஸ்டர்.. பின்னணியில் தமிழ் பெண்!

டிவிட்டர் சிஇஓ ஜாக் வைத்திருந்த ''பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம்'' என்ற போஸ்டர் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரல் புகைப்படத்தின் பின்னணியில் தமிழ் பெண்

    டெல்லி: டிவிட்டர் சிஇஓ ஜாக் வைத்திருந்த ''பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம்'' என்ற போஸ்டர் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இந்த போஸ்டரை உருவாக்கியது ஒரு தமிழ்பெண் என்று விவரம் வெளியாகி உள்ளது. டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் கடந்த வாரம் இந்தியா வந்தார்.

    இந்தியாவில் அவர் ராகுல் காந்தி, மோடி, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்தார். இந்த நிலையில் நவம்பர் 9ம் தேதி பத்திரிக்கையாளர்கள், பெண் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.

    போஸ்டர் பிரச்சனை

    போஸ்டர் பிரச்சனை

    அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் கடந்த வாரம் வெளியானது. அந்த புகைப்படத்தில் ஜாக் கையில் ஒரு போஸ்டர் வைத்து இருந்தார். அதில் ஆங்கிலத்தில் "Smash Brahmanical patriarchy" அதாவது ''பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம்'' என்று எழுதி இருந்தது. இந்த போஸ்டரை டிவிட்டர் சிஇஓ வைத்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பெரிய சர்ச்சையானது

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பிராமணர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். பல பிராமணர்கள் இதனால் மனமுடைந்ததாக எழுதி இருந்தனர். சிலர் டிவிட்டரிலேயே சென்று டிவிட்டர் சிஇஓ ஜாக்கை பிளாக் செய்து ரிப்போர்ட் அடித்தனர். இது பெரிய வைரல் ஆனது.

    யார் உருவாக்கியது

    யார் உருவாக்கியது

    இந்த நிலையில்தான், இந்த போஸ்டரை உருவாக்கியது ஒரு தமிழ்பெண் என்று விவரம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன் என்ற சமூக செயற்பாட்டாளர்தான் இந்த போஸ்டரை உருவாக்கியது. ஒரு கறுப்பின பெண் இந்த வாசகத்தை ஏந்தி நிற்பது போல வடிவமைத்து இருந்தார் தேன்மொழி சௌந்தரராஜன்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 2 வருடத்திற்கு முன்பே இவர் இந்த போஸ்டரை உருவாக்கிவிட்டார். அது தற்போது ஜாக்கால் வைரலாகி உள்ளது. உலகம் முழுக்க நடக்கும் சாதி ஆதிக்கத்திற்கும், நிற ஆதிக்கத்திற்கும் எதிராக இந்த வாசகத்தை உருவாக்கியதாக தேன்மொழி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும் இந்தியர்கள் ஜாதி பாகுபாடு பார்க்கிறார்கள் என்று சில மாதம் முன் இவர் எழுதிய கட்டுரை அமெரிக்காவில் பெரிய வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Smash Brahmanical Patriarchy: A Tamil girl behind the viral poster of Twitter CEO Jack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X