சிரித்தபடியே கை ஆட்டிய விஜய்.. அதென்ன கையில் "பேக்".. கார் கருப்பு, டிரஸ் கருப்பு.. என்னவா இருக்கும்
டெல்லி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் இன்று ஆஜராகி உள்ளார்.. கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் முக்கிய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.. இதற்கு விஜய் அதிகாரிகளிடம் பதிலளித்து வருகிறார்.. இதனிடையே டெல்லி வந்த விஜய், சிரித்தபடியே சிபிஐ அலுவலகத்திற்குள் சென்றது இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, தமிழக அரசியல்-சினிமா வட்டாரங்களில் இன்று பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது..

சிரித்தபடி வந்த விஜய்
தவெக தலைவர் மற்றும் நடிகருமான விஜயை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்த சிபிஐ அதற்கான சம்மனை அனுப்பிய நிலையில், இன்று காலை டெல்லி வந்தார்..
இதற்காக சென்னை இல்லத்திலிருந்து கார் மூலம் விமான நிலையம் சென்ற விஜய், காலை 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
விஜய் டெல்லி வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும் அங்கு வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாயின.. சிபிஐ அலுவலகம் முன்பும், அவர் செல்லும் பாதையிலும் பெரும் திரள் கூடும் என்பதால் அங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கருப்பு டிரஸ்ஸில் தவெக தலைவர்
டெல்லி வந்த விஜய், 11 மணிக்கே சிபிஐ அலுவலகம் வருவதாக இருந்தது. ஆனால் அரை மணி நேரம் தாமதமாக 11.30 மணிக்கு அலுவலகம் வந்தார்..
அவருடன் த.வெ.க முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் டெல்லி வந்துள்ளனர்.. விஜய் மற்றும் அவருடன் வந்த அனைவரும் கருப்பு உடை அணிந்துள்ளனர்..
அவர்களை அழைத்து சென்ற கார் கூட கறுப்பு நிறத்தில் இருந்தது.. இந்த கருப்பு நிற பின்னணியின் காரணம் என்ன என்பது தெரியவில்லை..
விஜய்யுடன் வந்த நிர்வாகிகள் அனைவருமே தங்களது கைகளில் பேக் ஒன்றை ஏந்தியபடி வந்துள்ளனர்.. அதில் விசாரணை தொடர்பான ஆவணங்கள், சான்றுகள் ஏதாவது இருக்கிறதா? தெரியவில்லை..
சிஜிஓ வளாகம் (CGO Complex)
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.. விஜய் விசாரணைக்காக லோதி சாலையில் இருக்கும் சிஜிஓ காம்ப்ளக்ஸ் அதாவது Central government Officers Complex பகுதிக்கு காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்...அங்குதான் சிபிஐ தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
முன்னதாக, அங்கு காரில் சென்றபோது, தனக்காக கூடிநின்றிருந்தவர்களை பார்த்து கைகளை அசைத்து சிரித்தபடியே சென்றார்.. ஆனால் நீலாங்கரை வீட்டிலிருந்து ஏர்போர்ட் கிளம்பும்போது, விஜய் உட்பட அனைவருமே ஒருவித சோகத்தில் இருந்த நிலையில் டெல்லி வந்ததுமே முகம் மலர்ச்சி பெற்றுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜவஹர்லால் சாலை வழியாகத்தான் விஜய் அழைத்து செல்லப்பட்டார்.. இந்த சாலையானது எப்போதுமே டிராபிக் நிரம்பி வழியக்கூடிய இடமாகும்.. இருவழிப்பாதையான இந்த சாலை, இன்று விஜய் வருகையால், ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.. ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்து விடக்கூடாது என்பதற்காகவே உடனே பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன..
10 கேள்விகள்
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில் மட்டும் பிரத்யேகமாக பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. பொதுமக்களுக்கும் இந்த பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. அவசர அவசிய காரணத்துக்காக வந்தவர்கள் மட்டுமே ஐ.டி. கார்டு மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்..
இன்று சிபிஐ அதிகாரிகள் 10 முக்கிய கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. அந்தவகையில் குறைந்தது இன்றைய தினம் 5 மணி நேரம் விஜயிடம் விசாரணை நடத்தப்படலாம் என்கிறார்கள்.. ஆனால் இன்றைய தினமே விசாரணை முடிந்துவிடுமா? அல்லது நாளையும் தொடருமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications