Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. ஏதோ செய்யப்போய் பாஜகவுக்கு பாயிண்ட்டை தூக்கி கொடுத்த ராகுல் காந்தி! அனல் பேச்சு அடிபட்டுபோச்சே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆக்ரோஷமாக பேசிய ராகுல் காந்தி தனது உரையை முடித்தபோது ‛ஃப்ளையிங் கிஸ்' கொடுத்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கோபமடைந்து கொதித்து போனார்.

மணிப்பூர் வன்முறை பற்றி பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்பதற்காக ‛இந்தியா' எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சியினர் மத்திய பாஜக அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

Smiriti Irani Condemns to Rahul Gandhi for his flying kiss

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது. இன்று இன்று 2வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். நேற்று பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று பேசினார்.

அப்போது ராகுல் காந்தி, பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராகுல் காந்தி பேசும்போது, ‛‛மணிப்பூருக்கு நான் சென்று வந்துள்ளேன். ஆனால் பிரதமர் மோடி செல்லவில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லை என நினைக்கிறார். நீங்கள் மணிப்பூரை இரண்டு துண்டுகளாக துண்டாக்கி உள்ளீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை படுகொலை செய்துவீட்டீர்கள். மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரததாயை நீங்கள் கொலை செய்துள்ளீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல தேசதுரோகிகள்'' என கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என சபாநாயகரிடம் கூறினர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இருகட்சியினரும் மாறிமாறி பேசியதால் அமளி ஏற்பட்டது.

இதற்கிடையே ராகுல் காந்தி தனது பேச்சை முடித்த பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ‛ஃப்ளையிங் கிஸ்' கொடுத்து புறப்பட்டார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தியை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறைகளை பட்டியலிட்ட ஸ்மிருதி இரானி அதற்கு எப்போது நியாயம் கிடைக்கும் என சாடினார். இந்த வேளையில் ராகுல் காந்தி கொடுத்த ‛ஃப்ளையிங் கிஸ்' சம்பவத்தையும் கூறி கண்சிவந்தார்.

இதுபற்றி ஸ்மிருதி இரானி ஆக்ரோஷமாக பேசினார். அப்போது, அவர், ‛‛நான் ஒரு விஷயத்தை எதிர்க்கிறேன். எனக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டவர் (ராகுல் காந்தி) சபையில் இருந்து வெளியேறுறம் முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பெண் எம்பிக்கள் அமரும் நாடாளுமன்ற சபையில் பிளேயிங் கிஸ் கொடுத்துள்ளார். பெண் மீது வெறுப்பு கொண்ட ஆண் ஒருவரால் தான் இதுபோன்று செய்ய முடியும். நாடாளுமன்றத்தில் இதுபோன்று கண்ணியமற்ற நடத்தையை நான் இதுவரை பார்த்ததே இல்லை'' என்றார்.

மேலும் ராகுல் காந்தியின் பிளேயிங் கிஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாகி உள்ளது. அவர் பெண் எம்பிக்களை அவமதித்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் கூறியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் அவர்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர். இதுதவிர மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே, பெண் எம்பிக்கள், பாஜக மூத்த எம்பிக்கள் பலரும் ராகுல் காந்தியின் ‛பிளேயிங் கிஸ்' செயலை கண்டித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛அனைத்து பெண் எம்பிக்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு ராகுல் காந்தி வெளியேறியுள்ளார். இது தவறான, அநாகரீகமான நடத்தையாகும். அதோடு நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்று நடக்கவேயில்லை என மூத்த எம்பிக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை எடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்'' என்றார்.

பாஜகவின் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறும்போது,‛‛ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுக்கிறார். அவருக்கு என்ன ஆகிவிட்டது?. பெண்கள் சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் அவருக்கு நாகரீகம் என்பது இல்லை. அவரது செயல் வேதனையாக இருக்கிறது'' என்றார். இதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Smiriti Irani Condemns to Rahul Gandhi for his flying kiss

இதனால் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் விவாதத்தை விட ‛பிளேயிங் கிஸ்' விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி பாஜகவினருக்கு பாயிண்டை தூக்கி கொடுத்துள்ளதாக ஒருதரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+