உளவு பார்க்க முடியாது.. ‛சஞ்சார் சாத்தி’ செயலி ஏன் முக்கியம்? லோக்சபாவில் விளக்கிய மத்திய அமைச்சர்
டெல்லி: ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ‛சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்ப கிளம்பி உள்ளது. ‛சஞ்சார் சாத்தி' செயலி வழியாக மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று லோக்சபாவில் விளக்கம் அளித்தார். அப்போது அந்த செயலியை வைத்து உளவு பார்க்க முடியாது என்று கூறிய அவர் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக ‛சஞ்சார் சாத்தி' எனும் செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நவம்பர் 28ம் தேதி தொடங்கி 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த ‛சஞ்சார் சாத்தி' என்பது மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள செயலி. இது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலமாக மக்கள் சைபர் பாதுகாப்பை பெற முடியும் என்று மத்திய அரசு கூறியது. இருப்பினும் அதனை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இப்படியான விஷயங்கள் இருந்தாலும் கூட இந்த செயலி மூலமாக மக்களை கண்காணிக்க முடியும் என்று கூறி எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற முடியாது என்று கூறிவிட்டது. இந்நிலையில் தான் சர்ச்சையை கிளப்பிய ‛சஞ்சார் சாத்தி' செயலி பற்றி லோக்சபாவில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛சஞ்சார் சாத்தி' செயலியை வைத்து யாரையும் உளவு பார்க்க முடியாது. அது நடக்கவும் செய்யாது. செல்போனில் இருக்கும் செயலியை திறந்து சுயவிவரங்களை அளித்தால் மட்டுமே ஆக்டிவேட் ஆகும். அதனை பயன்படுத்தாமலும் இருக்கலாம். மக்கள் தேவை என்றால் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த செயலி என்பது முழுக்க முழுக்க சைபர் மோசடி, டெலிகாம் சார்ந்த திருட்டில் இருந்து மக்களை பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த செயலியை கொண்டு போலியான ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிக்க முடியும். அதேபோல் தொலைந்துபோன செல்போனை கண்டுபிடிக்க முடியும். தற்போது வரை மாயமான அல்லது தொலைந்த பல ஆயிரம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த செயலி பயன்பாட்டில் இணைய வேண்டும். மக்கள் இதனை ஆட்சேபிக்க கூடாது. மாறாக வரவேற்க வேண்டும். ஏனென்றால் இந்த செயலியின் நோக்கம் மக்களை சைபர் மோசடியில் இருப்பது பாதுகாப்பது தான்'' என்று கூறினார்.
விவாதத்துக்கு உள்ளாகி உள்ள இந்த சஞ்சார் சாத்தி செயலியில்' ‛சக்சு' என்ற ஆப்ஷன் வழியாக போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், போலி கேஒய்சி அலர்ட்கள், ஆள்மாறாட்ட மோசடிகள், பணப்பறிப்பு லிங்குகள் பற்றி புகாரளிக்க முடியும். அதேபோல் தேவையற்ற வணிக அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதுதொடர்பாக ரிப்போர்ட் செய்யலாம். போலியான லிங்குகள், செயலிகள் பற்றியும் பாதுகாப்பற்ற இணையதளங்கள் பற்றியும் புகார் செய்யலாம்.
இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் தனது பெயரில் எத்தனை மொபைல் எண்கள் உள்ளன என்பதை அறியலாம். இதன்மூலம் நமக்கே தெரியாமல் நம் பெயரைப் பயன்படுத்தி ஏதேனும் இணைப்புகள் பெறப்பட்டிருந்தால் அதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கலாம். அதோடு நம் செல்போன் தொலைந்து போனால் அல்லது திருடுபோனால் இந்த செயலியின் மூலம் ஐஎம்இஐ எண்ணை முடக்கி வைக்கலாம். பிறகு செல்போன் கிடைத்த பிறகு அதனை அன்லாக் செய்யலாம். இதனால் இந்த செயலிகளை ஆண்ட்ராய்ட்டு மற்றும் ஐபோன் நிறுவனங்கள் கட்டாய செயலியாக வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications