நான் வர்றேன் தனியா! பாஜகவை தனி ஒருவனாய் தெறிக்க விட்ட ராகுல் காந்தி.. காலையில் வந்த பரபரப்பு ஆக்சன்!
டெல்லி: 18-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் அவரது பேச்சு இந்துக்களை புண்படுத்துவதாக இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டிய நிலையில் அவரது உரையின் 11 பகுதிகள் மக்களவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையின்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அதே நேரத்தில் கடந்த தேர்தல்களை விட தற்போது எதிர்க்கட்சிகள் மிக பலமாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றன.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பதினெட்டாவது மக்களவை நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியது. குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டம் தொடங்கி நிலையில் நேற்று அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ராகுல் காந்தி மஹூவா மொய்த்ரா, ஆ.ராசா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது. நீட் தேர்வு, மணிப்பூர் விவகாரம், அயோத்தி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி மிக ஆவேசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல விஷயங்களை ராகுல் காந்தி விமர்சனங்களாக முன்வைத்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மணிப்பூருக்கு செல்லாதது, இந்துக்களை பிரதமர் மோடியும் பாஜகவும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என பேசினார் ராகுல் காந்தி.
அவர் பேசியபோது முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று குறுக்கிட்டு பேசினார். இது மட்டுமல்லாமல் பாஜக அமைச்சர்களும் எம்பிக்களும் பலமுறை எழுந்து நின்று ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல மாநில பாஜக தலைவர்களும் பிரமுகர்களும் ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக இந்து சமூகத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் எனவும் அவர்களை வன்முறையாளர்கள் போல் சித்தரிக்கிறார் என பலரும் கண்டன அறிக்கைகளும் பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சின் 11 மக்களவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதின் சில பகுதிகள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை குறித்தும் இந்து மதம் குறித்தும் ராகுல் பேசிய விமர்சனங்கள் அவை குறிப்பில் இடம் பெறவில்லை. மேலும் இந்துக்கள், பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்த பேச்சில் சில பகுதிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications