"ஹிமாச்சலில் வேக்சின் தயாரிக்கலாம் என ரஷ்யாவுக்கு தெரிகிறது.. மத்திய அரசுக்கு தெரியவில்லை" - ஐகோர்ட்
டெல்லி: ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தேவையான உள்கட்டமைப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாகக் கருத்துகளை முன் வைத்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி இல்லை என்பதால் பல மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றம்
இந்நிலையில், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்) இணைந்து இந்தியாவின் பனசியா பயோடெக் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பது குறித்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மன்மோகன் மற்றும் நஜ்மி வஜீரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் வேதனை தரும் வகையிலிருந்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சிறப்பாகச் செயல்படலாம்
இது குறித்து அவர்கள் கூறுகையில், "கொரோனா 2ஆம் அலையை நாம் கையாண்ட விதம் வேதனை தருகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறை அனைவரையும் கடுமையாகப் பாதிக்கிறது. தலைநகர் டெல்லியில்கூட அனைவருக்கும் நம்மால் தடுப்பூசி செலுத்த முடியவில்லை. இந்தியாவில் நிறைய நல்ல நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

ரஷ்யாவால் முடிகிறது
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தேவையான உள்கட்டமைப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டது. மேலும், மத்திய அரசிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகே, பனசியா பயோடெக் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. எனவே, மத்திய அரசு அவர்களுக்கு 14 கோடி ரூபாய் உதவித்தொகையை அளிக்கலாம்" என்றனர்.

ஸ்புட்னிக் வி உற்பத்தி
இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை பேனேசியா பயோடெக் நிறுவனம் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கியது. ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் முதல் போட்ஜ் தடுப்பூசி தரநிலை பரிசோதனைக்காக ரஷ்யா அனுப்பப்பட்டது. இது குறித்துத் தான் நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications