26 நாள் உண்ணாவிரதத்துக்கு ‘குட்பை'.. சோனம் வாங்சுக்கை சமாதானம் செய்த ஜேபி நட்டா! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தவர் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுங். இந்நிலையில் தான் 26 நாள் உண்ணாவிரதத்தை நள்ளிரவில் சோனம் வாங்சுக் முடித்து கொண்டார். என்ன நடந்தது? சோனம் வாங்சுக் சமாதானம் ஆனது எப்படி? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

sonam-wangchuk-ends-his-26-days-hunger-strike-after-meeting-jp-nadda-jitendra-singh

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 28 ம் தேதி இந்த போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக் பங்கேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

நம் நாட்டின் கல்வித்துறையில் முக்கிய சீர்த்திருத்தம் கொண்டு வர வேண்டும். நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பன கோரிக்கையை முன்வைத்தார். 20 நாள் உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் கடந்த நிலையில் அவரது உடலநலம் மோசமானது. கடந்த 18 ம் தேதி காலையில் அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 21ம் தேதி குர்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தற்போது சோனம் வாங்சுக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்தாலும் கூட அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் கடைப்பிடித்து வந்தார்.

அவரது உண்ணாவிரதம் 26வது நாளை எட்டியது. இந்நிலையில் தான் நள்ளிரவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அணுசக்தி துறையின் அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் சேனாம் வாங்சுக்கை சந்தித்து பேசினர். அப்போது சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்ள ஒப்புக்கொண்டார். ஜேபி நட்டா குவளையில் கொடுத்த திரவஆகாரத்தை சோனம் வாங்சுக் குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

இந்த சமயத்தில் மத்திய அரசு சார்பில் சில முக்கிய வாக்குறுதிகள் சோனம் வாங்சுக்கிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீட் வினாத்தாள் கசிவு பற்றியும், கல்வி சீர்த்திருத்தங்கள் பற்றியும் நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்தப்படும். நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களின் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாக்குறுதிகளை தொடர்ந்து தான் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+