Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி காங்கிரஸ் ஊர்வலத்தில் எம்பிக்கள், தொண்டர்கள் அரெஸ்ட்.. தர்ணா செய்த ராகுல் கைது-பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதனை கண்டித்து ராகுல்காந்தி திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் அவரும் கைது செய்யப்பட்டார்.

Recommended Video

    Roadல் உட்கார்ந்த ராகுல் காந்தியை கைது செய்த போலீஸ்

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி. இவரது மகனும் எம்பியாகவும் இருப்பவர் ராகுல்காந்தி. இவர்கள் இருவர் மீதும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பான வழக்கை அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கபிரிவு சம்மன் அனுப்பியது.

     அமலாக்கப்பிரிவு விசாரணை

    அமலாக்கப்பிரிவு விசாரணை

    இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு மூலம் மத்திய பாஜக அரசு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை பழிவாங்குகிறது என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தான் கடந்த மாதம் ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 50 மணிநேரத்துக்கும் அதிகமான ராகுல்காந்தியிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

     சோனியா காந்தி ஆஜர்

    சோனியா காந்தி ஆஜர்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் சோனியா காந்திக்கு விசாரணையில் விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமான நிலையில் சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் கடந்த 21ம் தேதி அமலாக்கப்பிரிவு முன் ஆஜரானார். அப்போது 3 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் இன்று சோனியா காந்தி அமலாக்கப்பிரிவு முன்பு 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார்.

    காங்கிரஸ் தலைவர்கள் கைது

    காங்கிரஸ் தலைவர்கள் கைது

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோனியாவை மத்திய பாஜக அரசு சார்பில் அமலாக்கப்பிரிவு மூலம் பழிவாங்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் இன்று மதியம் 12 மணியளவில் நாடாளுமன்றத்தில் இருந்து ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகை நோக்கி புறப்பட்டனர். இவர்களை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கைது-ராகுல்காந்தி தர்ணா

    கைது-ராகுல்காந்தி தர்ணா

    இதையடுத்து எம்பிக்கள் உள்பட ஏராளமானவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதையடுத்து வாகனங்கள் மூலம் அவர்கள் அங்கிருந்து பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் போராடிய தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து ராகுல்காந்தி திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமானவர்கள் தர்ணா செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

    144 தடை உத்தரவு அமல்

    144 தடை உத்தரவு அமல்

    சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராவதையொட்டி டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்டமாக சத்தியகிரஹ போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரினார். ஆனால் அனுமதி மறுத்த போலீசார் ராஜ்காட்டில் 144 தடை உத்தரவு விதித்தனர். இதையடுத்து டெல்லியின் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் பல இடங்களில் அமலாக்கப்பிரிவினருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரஹ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+