என்னது ராஜினாமாவா.. சும்மா இருப்பா.. ராகுல் கடிதத்தை ஏற்க மறுத்த சோனியா காந்தி!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் விலகுவதாக ராகுல்காந்தி ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின.
இதில் பாஜக எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தீர்ப்பை ஏற்கிறேன்
பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அப்போது மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

காரிய கமிட்டி முடிவு செய்யும்
தொடர்ந்து பேசிய அவரிடம் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் அதுகுறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி முடிவு செய்யும் என்றார்.

ராகுல் கடிதம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான சோனியா காந்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தெரிகிறது.

கூட்டத்தில் முடிவு
ஆனால் அதனை ஏற்க சோனியா காந்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இவ்வாராம் நடைபெறும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதவி விலக முடிவு
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததாக தெரிகிறது.

அமேதியில் தோல்வி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரி இரானியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications