ஜி 20 மாநாட்டின் போதே அதிருப்தி? இந்தியா கொடுத்த ரூம்-இல் தங்க மறுத்த ட்ரூடோ.. வெளியான பரபர தகவல்
டெல்லி: ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஜஸ்டின் ட்ரூடோ, டெல்லி லலித் ஓட்டலில் சாதாரண அறையிலேயே தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான். 1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர்.

குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருநாடுகளும் தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளது.
அதோடு, அந்தந்த நாட்டில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கவனமாக இருக்குமாறு பயண அறிவுறுத்தலையும் இந்தியா- கனடா ஆகிய இரு நாடுகளுமே அறிவுறுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் ஏற்படாத பட்சத்தில் இரண்டு நாட்டு உறவு முறியும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கனடாவில் இருக்கும் லட்சோப லட்சம் பேர் பாதிக்கப்படலாம்.
அதோடு கனடாவுடன் மோதலால் கனடாவிற்கு நெருக்கமான அமெரிக்கா, ஆஸ்திரேலியா , பிரான்ஸ், யுகே என்று மேற்கு உலக நாடுகளின் உறவும் முறியும் வாய்ப்புகள் உள்ளன. உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மீது சாடிய கனடா தற்போது இந்தியாவின் மீது கொலை குற்றமே சுமத்தப்பட்டு இருப்பதால் இந்தியாவிற்கு பிரஷர் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜி 20 மாநாட்டின் போதே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டெல்லி நட்சத்திர ஓட்டலில் இந்தியா ஏற்பாடு செய்து கொடுத்த பிரஸ்சிடண்ட்ஷியல் ஓட்டலில் தங்க மறுத்த விவகாரம் தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் தங்கியிருந்த ஜ்ஸ்டின் ட்ரூடோ, வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக சகல வசதிகள் பாதுகாப்பு அமசங்களுடன் கூடிய பிரஸ்சிடன்ஷியல் சூட் ரூமில் தங்காமல் சாதாரண அறையிலேயே தங்கினாராம்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications