லோகோ பைலட்கள் தூங்கினால் பிடித்து கொடுத்துடும்.. விரைவில் வரப்போகும் வசதி?.. ரயில்வே மாஸ் பிளான்
டெல்லி: ரயில் பயணிகளின் சொகுசு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிகைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது லோகோ பைலட் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான கருவி ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக உள்ளது ரயில்வே. பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் ரயில் சேவையை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதிலும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களே ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இத்தகைய பெரிய நெட்வொர்க்கை கொண்ட ரயில்வேயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இருந்த போதிலும் சில நேரங்களில் மனித தவறுகள் காரணமாகவோ அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாகவோ விபத்து ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 294 பேர் பலியான துயர சம்பவமும் நடைபெற்றது.
தூங்கிவிட்டால் ஒலி எழுப்பும் கருவி: இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் ஏற்படுவதை தடுப்பது எப்படி? லோகோ பைலட் பணியின் போது கவனத்துடன் இருக்கிறாரா? என்பதை கண்காணிப்பதற்கான கருவிகளை தயார் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக ரயில்வே வட்டார தகவல்கள் கூறியதாவது:-
வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) இதற்காக செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்று தயார் செய்து வருகிறதாம். இது எப்படி வேலை செய்யும் என்றால் லோகோ பைலட் பணியின் போது கண்சிமிட்டுவதை கண்காணித்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை லோகோ பைலட் தூங்கிவிட்டால் உடனடியாக கண்டுபிடித்து லோகோ பைலட்டிற்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி அலார்ட் செய்யும்.
எப்போது தயாராகும்?: தேவைப்பட்டால், ரயிலை தானாகாவே நிறுத்தி விடும். ரயில்வே டிரைவர் உதவி அமைப்புக்கு (RDAS) அலர்ட் சென்றுவிடும் வகையில் இந்த கருவி தயாராகி வருகிறதாம். கடந்த ஜூன் மாதம் இதுபோன்ற ஒரு டிவைசை தயாரிக்குமாறும் ரயில்வே வாரியம் என்.எப்.ஆர்.இடம் கேட்டுக்கொண்டு இருந்ததாம். தற்போது கருவி இன்னும் தயாரிப்பு அளவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
கருவி சரியாக வேலை செய்கிறதாக என்பதற்காக அதன் டிரயல் நடப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த கருவி தயாராகி விடும் என்றும் சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 20 சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயிலில் பொருத்தி அதன் செயல்பாட்டை ஆய்வு செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
விமர்சனம்: அதன்பிறகு அனைத்து ரயில்வே தரப்பிலும் கருத்து கேட்ட பிறகு அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்தியன் ரயில்வே லோகோ ரன்னிங்மேன் அமைப்பு, இந்த கருவியை பயனற்ற ஒன்று என்று விமர்சித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரயில் லோகோ பைலைட்கள் 60 வினாடிகளுக்கு ஒருமுறை பெடலை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் ரயில் நின்று விடும்.
அப்படியான ஒரு சிஸ்டம் தற்போது உள்ளது. ஓட்டுநரை அலார்ட் செய்ய இதுவே போதுமானது. ரயில்வே உண்மையிலேயே ரயில் இயக்கத்தின் பாதுகாப்பில் அக்கறையோடு இருந்தால், லோகோ பைலட்களுக்கு இருக்கு சில குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும். போதிய உணவு இடைவேளை இன்றி கூட பணியாற்ற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதை சீர் செய்தாலே அவர்களின் பணித்திறன் மேம்படும்" என்று கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications