நம்ம மோடிதான்.. தலையில் துண்டு, கையில் சலங்கை.. அவங்க பாட இவர் தாளம் போட.. ரவிதாஸ் விழாவில் பூரிப்பு
ரவிதாஸ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்
டெல்லி: 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் குரு ரவிதாஸின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி கரோல்பாகில் உள்ள ரவிதாஸ் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
யார் இந்த குரு ரவிதாஸ்?
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 1377ல் பிறந்தவர்... இவர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்.. இந்திய ஆன்மீகவாதி.. கவிஞர்.. சமூக சீர்திருத்தவாதி.. ஆன்மீக குரு.. இப்படி பல பரிமாணங்களை கொண்டவர்.
குரு ரவிதாஸ் பக்தி இலக்கியங்களைப் படைத்தார். அவரது பாடல்கள் குரு கிராந்த் சாஹிப் எனப்படும் சீக்கியர்களின் புனித நூலில் கூட இடம்பெற்றுள்ளது. பக்தி இயக்கத்தின்போது பக்தி பாடல்கள், வசனங்கள், ஆன்மீக போதனைகள் போன்ற பல எண்ணற்ற பங்களிப்புகளை தந்தவர்..

ரவிதாஸ்
முக்கியமாக ரவிதாஸ் சாதி அமைப்பை மிக தீவிரமாக எதிர்த்தார்.. அதேசமயம், மத நல்லிணக்கம், ஆன்மீக சுதந்திரம், சமத்துவத்தை ஊக்குவித்தவர்.. ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜனம் ஆஸ்தான் என்பது அவர் பிறந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பெயராகும்.. "ஒவ்வொரு மனிதருக்குள் கடவுள் இருக்கிறார். ஆகையால் மனிதரை சாதி, மதம், பிற சமூக கட்டமைப்புகளால் பிரிவினை செய்வது பலனற்றது" என்பதே ரவிதாஸின் கோட்பாடு.

மாசி பவுர்ணமி
அவர் மீரா பாயின் ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.. இன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரவிதாஸின் 645வது பிறந்தநாள் என்பது சிறப்புவாய்ந்த கூடுதல் தகவலாகும். அவரது பிறந்தநாள் எதுவென்று குறிப்பாக தெரியாவிட்டாலும் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி நாள் அவரது பிறந்ததினமாக கொண்டாடப்படுகிறது... ஆண்டுதோறு மாசி பவுர்ணமியின் போது அவரது பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவது வழக்கம்.

தீபாராதனை
ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி டெல்லி கரோல்பாக் விழாக்கோலம் பூண்டுள்ளது.. இங்குள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஸ்ரம் தாம் மந்திரில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். குரு ரவிதாஸ் உருவச்சிலைக்கு தீப ஆராதனை காட்டி பூஜைகளும் செய்தார்... பின்னர் அங்கு நடைபெற்ற, சபத் கீர்த்தனையிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். அங்கிருந்த பக்தர்களுடன் உட்கார்ந்து, அவர்கள் பாட்டுப்பாட அதற்கேற்ப இசைக்கருவி ஒன்றை இசைத்து, கீர்த்தனையில் ஆர்வமுடன் பங்கேற்றார் மோடி...இந்த நிகழ்வின்போது, மோடி தன்னுடைய தலையில் துணி ஒன்றையும் கட்டியிருந்தார்...

பிரதமர் மோடி
அதாவது, ரவிதாஸ் ஏற்படுத்திய ரவிதாஸியா என்ற பக்தி மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் யாராக இருந்தாலும், இப்படியான ஒரு துணியை தலையில் அணிவது வழக்கம்.. ரவிதாஸியா மார்க்கத்தை பின்பற்றுவோருடன் ஒன்றுபட்டு நிற்கும் அடையாளமாகவே இந்த துண்டு தலையில் கட்டிக் கொள்ளப்படும்.. அதைதான் பிரதமரும் தன்னுடைய தலையில் அந்த துண்டை கட்டி வந்தார்... இறுதியில், கோயிலில் இருந்து செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில், குரு ரவிதாஸின் வாழ்க்கை பிறருக்கு ஓர் ஊக்கம் என்று பதிவிட்டார்.

ட்வீட் பதிவு
இதனிடையே, பிரதமர் மோடி இது தொடர்பாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "சாந்த் ரவிதாஸ் ஜியின் புனித தலத்தைப் பற்றிய சில விஷயங்களை நான் நினைவுபடுத்துகிறேன்... 2016 மற்றும் 2019ம் ஆண்டுகளில், அங்கு தரிசனம் செய்து 'லங்கர்' செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த யாத்திரை தளத்தின் வளர்ச்சி பணிகளில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்று எம்பியாக நான் முடிவு செய்திருந்தேன்... ஒவ்வொரு அடியிலும், திட்டத்திலும் குரு ரவிதாஸின் உணர்வை அரசாங்கம் உள்வாங்கியுள்ளது" என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications