Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிங்கப்பூர், ஹாங்காங் எங்களுக்கு தடை விதிக்கவில்லை!" எவரெஸ்ட் பரபர விளக்கம்.. அப்போ என்ன பிரச்சினை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எவரெஸ்ட் மசாலா பொருள்களுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் பரவிய நிலையில், இது குறித்து எவரெஸ்ட் நிறுவனமே விளக்கமளித்துள்ளது.

வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி வெளிநாடுகளில் வசிப்போருக்கு இந்திய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கும். எனவே, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக நமது நாட்டை சேர்ந்த நிறுவனங்களே அங்குள்ள இந்தியர்களுக்குத் தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்து விற்று வருகின்றன.

Spice Brand Everest explains that they were not Banned just one Product Recalled

குறிப்பாக இந்திய மசாலாக்கள் வெளிநாடுகளில் கிடைப்பது கடினம். இதனால் இந்திய மசாலா நிறுவனங்களே தங்கள் தயாரிப்புகளை அங்கு ஏற்றுமதி செய்யும். அப்படி இந்தியாவில் இருந்து மசாலாவை ஏற்றுமதி செய்யும் இரு முக்கிய பிராண்டுகள் தான் எவரெஸ்ட் மற்றும் எம்டிஎச்.

இரு நாடுகள் எச்சரிக்கை: இதற்கிடையே இந்த இரு நிறுவனங்களின் சில மசாலாக்களுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் தடை விதித்தன. அதாவது இவர்களின் மசாலா பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக எத்திலீன் ஆக்சைடு இருப்பதால் மக்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எத்திலீன் ஆக்சைடு காரணமாக கேன்சர் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலா பொருட்கள் - அதாவது மெட்ராஸ் குழம்பு பவுடர், சாம்பார் மசாலா, குழம்பு மலாசா மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் இந்த எத்திலீன் ஆக்சைடு அதிகம் இருப்பதால் அதைத் திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் ஹாங்காங் இந்த உத்தரவைப் பிறப்பித்த நிலையில், தொடர்ந்து சிங்கப்பூரும் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

எவரெஸ்ட் விளக்கம்: இதற்கிடையே எவரெஸ்ட் நிறுவனத்திற்கு மொத்தமாக இரு நாடுகள் தடை விதித்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவ தொடங்கின. இந்தச் சூழலில் எவரெஸ்ட் நிறுவனம் இப்போது இதற்கு விளக்கமளித்துள்ளது. எந்தவொரு நாடும் எவரெஸ்ட் நிறுவனத்திற்குத் தடை விதிக்கவில்லை என்றும் ஒரு வகை மசாலாவை மட்டும் திரும்பப்பெற அறிவுறுத்தல் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எவரெஸ்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "எந்தவொரு நாட்டிலும் எவரெஸ்ட் நிறுவனம் தடை செய்யப்படவில்லை.. ஹாங்காங் ஒரு மசாலா வகையை வாபஸ் பெற அறிவுறுத்தி இருந்தது. அந்த உத்தரவை மேற்கோள் காட்டி சிங்கப்பூரின் உணவு பாதுகாப்பு ஆணையமும் ஒரு வகை மசாலாவை மட்டும் திரும்ப பெற அறிவுறுத்தியது. மேலும், இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

பாதுகாப்பானது: எங்கள் நிறுவனம் வெளியிடும் 60 வகையான மசாலாக்களில் ஒரே ஒரு மசாலாவுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனத்தின் மசாலா பொருட்கள் உயர்தரத்தைக் கொண்டது. அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று அவர் கூறினார்.

இது ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்து இரு நாடுகள் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்த நிலையில், இந்தியாவிலும் அனைத்து நிறுவனங்களின் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்குச் சேகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு நடவடிக்கை: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து உணவு ஆணையர்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மசாலா மாதிரிகள் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். 3, 4 நாட்களில் மாதிரிகளைச் சேகரிக்கும் பணி முடிந்துவிடும். இந்த இரு நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களின் மசாலா பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த உள்ளோம்.

இதன் ரிப்போர்ட் 20 நாட்களில் கிடைக்கும். அதில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் முடியும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+