முடிஞ்சா இந்த படத்துல சிறுத்தை எங்க இருக்குனு கண்டுபிடிங்க பார்க்கலாம்.. டக்குனு சொன்னா பிஸ்தா தான்

உருமறைப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உருமறைப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக விலங்குகள் இரையை வேட்டையாடும் போது மறைந்திருந்து தான் தாக்கும். இதற்காக பல தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சியை அவை கையாளும்.

spot the hidden leopord in this picture

இதில் மிகவும் புத்திசாலித்தனமாக வேட்டையாடும் விலங்குகளில் ஒன்று சிறுத்தை. மிக வேகமாக ஓடக்கூடிய திறன் கொண்ட சிறுத்தைகள், அசால்டாக மரம் ஏறக் கூடியவை.

சில சிறுத்தைகள் காட்டில் உள்ள நிலப்பரப்புக்கு ஏற்ற மாதிரி உருமாறிக்கொள்ளும். எனவே அவை அந்த இடத்தில் இருப்பதே தெரியாது. இதனால் இரையை வேட்டையாடுவது எளிதாகும்.

இதேபோல் உருமாற்றி ஒளிந்திருக்கும் சிறுத்தைகளின் புகைப்படங்கள் மிகவும் பிரபலம். சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம்.

அதுபோல் தான் சமீபத்தில் ஒரு சிறுத்தையின் புகைப்படம் வைரலாகியுள்ளது. பெல்லா லாக் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, 'இதில் ஒரு சிறுத்தை உள்ளது. முடிந்தால் கண்டு பிடியுங்கள்' என குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை தேட ஆரம்பித்துவிட்டனர். ஒரு சிலர் மட்டும் சிறுத்தையை சரியாக கண்டுபிடித்தனர். பெரும்பான்மையானோர் இரண்டு, மூன்று சிறுத்தைகளை எல்லாம் வட்டமிட்டு காட்டினர்.

பெல்லா லாக் பதிவிட்ட இந்த புகைப்படம் உடனடியாக வைரலாகியுள்ளது, புகைப்படத்தில் இருக்கும் சிறுத்தையை பலரும் தேடி வருகிறார்கள். பலர் இதே போல் உள்ள சில கண்கட்டி வித்தை புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். முடிந்தால் நீங்களும் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுத்தை கண்டிபிடியுங்கள் பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+