மோடியை சந்தித்தார் இலங்கை அதிபர் அனுரகுமர! மீனவர் பிரச்சினைக்கு தீர்வு எட்டுமா என எதிர்பார்ப்பு
டெல்லி: இலங்கையின் அதிபராக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக 3 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வந்திருந்தார். இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மூலம் தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இலங்கையில் சமீப காலமாக பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வந்தது. இதன் உச்சமாக மக்கள் புரட்சி வெடித்தது. இதைக்கண்டு பயந்த அப்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து இடைக்கால அதிபரா கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். அவரது ஆட்சியில் பெரிய அளவுக்கு பிரச்னைகள் இல்லை என்றாலும் கூட, ஏற்கெனவே இருந்த பிரச்னைகள் எதுவும் குறையவில்லை. இப்படி இருக்கையில்தான் புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது.

தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சியின் வேட்பாளரான அனுரகுமார திசநாயக வெற்றி பெற்றார். இலங்கை வரலாற்றில் இடதுசாரி வேட்பாளர் ஒருவர் வெற்றிப்பெறுவது இதுவே முதல்முறையாகும். எனவே அவர் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் பயணமாக அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். 3 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி வந்த அவருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்.

இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த திசநாயக, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை திசநாயக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விரிவாக பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் முதலீடுகளை ஈர்க்க இலங்கை ஆர்வமாக இருக்கிறது.
மறுபுறம் இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு எட்டப்படுமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 3228 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை சுமார் 65 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது ஒருபுறம் என்றாலும் கூட மறுபுறம் படகுகள் பறிமுல் அதை அழிப்பது உள்ளிட்ட விஷயங்களும் பொருளாதார அளவில் பெரிய பாதிப்பை தமிழக மீனவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications