இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் LIVE: தேசிய மக்கள் சக்தி 141; ஐமச 35; தமிழரசு கட்சி 7-ல் வெற்றி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமாக 141 இடங்களில் வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அணி 35 இடங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி 7 இடங்களிலும் வென்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் (196)
தேசிய மக்கள் சக்தி 141 (6,863,186 வாக்குகள்)
ஐக்கிய மக்கள் சக்தி 35 (1,968,716 வாக்குகள்)
இலங்கை தமிழரசு கட்சி 7 (257,813 வாக்குகள்)
புதிய ஜனநாயக முன்னணி 3 (500,835 வாக்குகள்)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 (350,429 வாக்குகள்)
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 (87,038 வாக்குகள்)
ஐக்கிய தேசியக் கட்சி 1 (66,234 வாக்குகள்)
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1 (65,382 வாக்குகள்)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 (39,894வாக்குகள்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 (33,911வாக்குகள்)
சுயேட்சை குழு (17) 1 (27,855வாக்குகள்)
இலங்கை தொழிலாளர் கட்சி 1 (17,710வாக்குகள்)
கல்முனை கோட்டையை இழந்த முஸ்லிம் காங்கிரஸ்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்தது கல்முனை. ஆனால் இந்த முறை கல்முனை தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி 18,165 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது. 2-வது இடம் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 9,650 வாக்குகள்தான் கிடைத்தன
97 இடங்களுடன் தேசிய மக்கள் சக்தி முன்னிலை
தேசிய மக்கள் சக்தி 4,473,384 வாக்குகள் 97 இடங்கள்; ஐக்கிய மக்கள் சக்தி 1,409,193 வாக்குகள் 26 இடங்கள்; தமிழரசுக் கட்சி 127,206 வாக்குகள் 3 இடங்கள்; புதிய ஜனநாயக முன்னணி 317,311 வாக்குகள் 2 இடங்கள்; ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 243,354 வாக்குகள் 2 இடங்கள்; ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி 66,234 வாக்குகள்; ஒரு இடம்
88 இடங்களுடன் தேசிய மக்கள் சக்தி முன்னிலை
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இதுவரையிலான முடிவுகள்:
தேசிய மக்கள் சக்தி 88; ஐக்கிய மக்கள் சக்தி 24; புதிய ஜனநாயகக் கட்சி 2; ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 2; இலங்கை தமிழரசுக் கட்சி 2; ஐக்கிய தேசியக் கட்சி-1 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1, இலங்கை தொழிலாளர் கட்சி-1 இடங்களைப் பெற்றுள்ளன
33 இடங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 43 இடங்களில் 33 இடங்களை ஜனாதிபதி அனுர குமர திசநாயக்கவின் ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 7 இடங்களில் வென்றுள்ளது.
READ MORE













Click it and Unblock the Notifications