மாநிலங்களுக்கான வரிபகிர்வு நிதி விடுவிப்பு..தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி.. உத்தரபிரதேசத்திற்கு அதிகம்
டெல்லி: நவம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூபாய் 2,976.10 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி 3 நாட்களுக்கு முன்பே வரி பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ.2,976.10 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி நிதியை மத்திய அரவு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி 3 நாட்களுக்கு முன்பே வரி பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதி பகிர்வு போதிய அளவு இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம். இது தொடர்பாக அமைச்சர் சட்டப்பேரவையில் பேசுகையில், நேரடி வரி வருவாயைப் பொறுத்தமட்டில், மத்திய அரசின் நேரடி வரி விதிப்பில் தமிழகத்தின் பங்களிப்பில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருந்து வருகிறோம்.
இருந்த போதிலும் அந்த பங்களிப்புக்கு நிகரான பகிர்வு கிடைக்கவில்லை. மத்திய அரசுக்கு வரி வருவாயாக தமிழ்நாட்டில் இருந்து செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பக் கிடைக்கிறது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக ஆளும் மாநிலத்திற்கு அதிக தொகை விடுவிக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில், அம்மாநிலம் செலுத்தும் வரி ஒரு ரூபாய்க்கு ஈடாக அவர்களுக்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது. உத்தரபிரதேசம் செலுத்திய வரியைவிட, வரி பகிர்வு 4 மடங்கு அதிகமாக உள்ளது. இதுதான் ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணிலே வைக்கும் மத்திய அரசின் செயல்பாடாக இருக்கிறது" என்று விமர்சித்து இருந்தார்.
நவம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ள தொகையை மாநில வாரியாக இங்கே பார்க்கலாம்.
1. ஆந்திரப் பிரதேசம் - ரூபாய் 2,952.74 கோடி
2. அருணாச்சல பிரதேசம் - 1281.93
3. அஸ்ஸாம் - 2282.24
4. பீகார் - 7338.44
5. சத்தீஸ்கர் -2485.79
6. கோவா - 281.63
7. குஜராத் - 2537.59
8. ஹரியானா- 797.47
9. ஹிமாச்சல் பிரதேசம் - 605.57
10. ஜார்கண்ட் - 2412.83
11. கர்நாடகா - 2660.88
12. கேரளா - 1404.50
13. மத்திய பிரதேசம்- 5727.44
14. மகாராஷ்டிரா- 4608.96
15. மணிப்பூர் - 522.41
16. மேகாலயா - 559.61
17. மிசோரம் - 364.80
18. நாகலாந்து - 415.15
19. ஒடிஷா - 3303.69
20. பஞ்சாப் - 1318.40
21. ராஜஸ்தான் - 4396.64
22. சிக்கிம் - 283.10
23. தமிழ்நாடு - 2976.10
24. தெலுங்கானா- 1533.64
25. திரிபுரா - 516.56
26. உத்தர பிரதேசம் - 13088.51
27. உத்தரகாண்ட் - 815.71.
28. மேற்கு வங்காளம் - 5488.88.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications