ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கறார் கருத்து
ஆளுநர்கள் அரசியல் களத்தில் நுழையக் கூடாது என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து.
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியல் களத்தில் நுழையக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு, பாஜக இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக, சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்றது.

மகாராஷ்டிராவின் முந்தைய சிவசேனா அரசுக்கான நெருக்கடிகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. இந்த வழக்கில் மகாராஷ்டிரா ஆளுநர் சார்பில் ஆஜரானார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.
துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைக்கும் போது, நமது நாட்டில் இரு கட்சி ஆட்சி முறை என்பது இல்லை. இந்தியா என்பது பல கட்சிகளைக் கொண்ட ஜ்னாநாயக கட்டமைப்புள்ளது. பல கட்சி ஜனநாயகம் என்பது கூட்டணி அரசியல் யுகத்தைக் குறிப்பிடுகிறது. கூட்டணி என்பதும் இரு வகையிலானது. ஒன்று தேர்தலுக்கு முந்தையது; மற்றொன்று தேர்தலுக்குப் பிந்தையது.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சர்ந்தர்ப்பவாத அடிப்படையில் எண்ணிக்கையை சமன் செய்யக் கூடியது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பது சித்தாந்தம் அல்லது கோட்பாடு அடிப்படையிலானது. மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்னர் சிவசேனா, பாஜக கூட்டணி இருந்தது. ஆகையால் வாக்காளர்கள் இரு கட்சிகளின் சித்தாந்த அடிப்படையில் வாக்களித்தனர். தேர்தல் களத்தில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே காங்கிரஸையும் தேசியவாத காங்கிரஸையும் எதிர்த்தார். ஆனால் அந்த இரு கட்சிகளுடன் இணைந்தே புதிய ஆட்சியையும் உத்தவ் தாக்கரே அமைத்தார். இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ஆளுநர் என்பவர் நம்பிக்கை வாக்கெடுப்பை மட்டும் நடத்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல் களத்தில் நுழையக் கூடாது என குறிப்பிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications