டெல்லியில் இன்று காலையிலும் கல்வீச்சு- நீடிக்கும் பதற்றம் - அதிவிரைவுப்படையினர் கொடி அணிவகுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி பிரஹம்புரி, மெளஜ்பூர் பகுதிகளில் இன்று காலை இரு தரப்பினரிடையே கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதாகவும் இதையடுத்து அதிவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

    Stone-pelting took place today morning in Delhi

    வடகிழக்கு டெல்லியில் இது இரு சமூகங்களிடையேயான மோதலாக வெடித்தது. இம்மோதல்களில் இதுவரை 7 பேர் பலியாகினர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் பிரஹம்புரி, மெளஜ்பூர் பகுதிகளில் இன்று காலையிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனையடுத்து அப்பகுதிகளில் போலீசார், அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டனர். அத்துடன் வன்முறைகளை கட்டுப்படுத்த அதிரவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பும் நடத்தினர். வடகிழக்கு டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+