8 வாரம்தான் கெடு.. ஒரு தெரு நாயும் தெருவில் இருக்க கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! டெல்லியில்
டெல்லி: தெருநாய்கள் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும், எட்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருநா்களை கண்டிப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இதைத் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தெருநாய்கள் துரத்துவது, கடிப்பது போன்ற பிரச்சனையால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தெருநாய்கள் துரத்துவதால் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் ரேபிஸ் பாதிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெருநாய் பிரச்சனை தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும், எட்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெருநாய் தாக்குதலுக்குப் பிறகு ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவது குறித்த செய்தி அறிக்கை வெளியானது. இதனை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் ஜேபி பார்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி பர்திவாலா கூறுகையில், பொது நலனுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் எந்தவித உணர்வுகளையும் கொண்டு வரக்கூடாது. அனைத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் தெருநாய்களைப் பிடித்து தொரைதூரப் பகுதிக்கு மாற்ற வேண்டும். தற்போதைக்கு விதிகளை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது, தெருநாய்களை அப்புறப்படுத்துவதற்கான இடம் டெல்லியில் பாார்க்கப்பட்டதாகவும், ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தடையாணை பெற்றதால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோபமடைந்த நீதிபதிகள், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் பொறுப்பேற்பார்களா. தெருநாய்கள் இல்லாத குடியிருப்பு பகுதிகளை நாம் கட்டாயம் உருவாக்க வேண்டும். இதில், மத்திய அரசின் தரப்பு கருத்துகள் மட்டுமே கேட்கப்படும். நாய் பிரியர்கள் உள்ளிட்ட எந்த தரப்பினர் மனுவும் ஏற்றுக் கொள்ளப்படாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் அடுத்த 8 வாரத்துக்குள் பிடித்து அகற்ற வேண்டும் என்றும், நாய்களுக்கான தங்குமிடங்களை கட்டமைக்கவும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நாய்கள் காப்பகங்களில் கருத்தடை, தடுப்பூசி போடக்கூடிய நிபுணர்களை பணியமர்த்தவும், நாய்களை வெளியே வராதபடி கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் நிறுவவும், நாய்க்கடி தொடர்பான வழக்குகளைக் புகார் அளிக்கும் வகையில் ஹெல்ப்லைன் தொடங்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேபிஸ் நோய்க்கான மருத்துகள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ள நிலையில், குடியிருப்பு பகுதியில் ஒரு தெருநாய் கூட இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications