டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.6 ஆக பதிவு- மக்கள் பீதி
டெல்லி: டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்படுகிறது.
நேபாளத்தில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4 அலகுகளாக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கத்தால் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். நேபாளத்தில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிர்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

நேபாள நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் பகுதி. இதனால் ஜாஜர்கோட், ருக்கும் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் பெரும் சேதமும் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.
ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஏற்படுகிற கடும் நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடபகுதிகளிலும் உணரப்படுவது வழக்கம். நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கமும், அதன் பிந்தைய அதிர்வுகளும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நேபாளத்தில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவானது. இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.6 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களில் இது 2-வது முறையாகும்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வீதிகளில் குவிந்தனர். அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்படுவதால் வட இந்திய மாநில மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications