"அப்புறம் என்ன மோடி மாதிரியா இருக்கனும்.." நறநறக்கும் சுப்பிரமணியன் சுவாமி.. விக்கித்து பார்க்கும் பாஜக
டெல்லி: கொலிஜியம் அமைப்பு முறை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளிப்படையாக பேசி வருவது அநாகரீகமானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் தலையிடுவது சரியானது அல்ல என கிரிண் ரிஜூஜூ பேசி வந்துள்ளார்.
இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் மோடி அவரது அமைச்சரவையை தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறாரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் கருத்து
இது தொடர்பாக தனது டிவிட்டரில், "கொலிஜியம் நீதிபதிகளை தேர்வு செய்யும் விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் தலையிடக்கூடாது. நீதிபதிகளின் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது சில நேரங்களில் மறுக்கலாம். ஆனால் இது குறித்து அமைச்சர் கூறியிருக்கும் கருத்து அநாகரீகமானது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அவர்களுக்கு தெரியாதவர்களை தேர்வு செய்வதில்லை என்று அமைச்சர் கூறுகிறார். பிரதமர் மோடி அவரது அமைச்சரவையை தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?" என கேள்வியெழுப்பி இருக்கிறார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்துறை அமைச்சரின் கருத்து
இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்தை கொலிஜியம்தான் மேற்கொள்கிறது. உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் கொலிஜியத்தில் உள்ள நீதிபதிகள் தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த முறைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனெனில், கொலிஜியம் பரிந்துரைத்த பட்டியலிலிருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று புதிய நீதிபதிகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் இறுதி செய்து அனுப்பும். ஆனால், மத்திய அரசு தன்னிச்சையாக நீதிபதிகளை தேர்வு செய்ய முடியாது. இது இந்த கொலிஜியம் அமைப்பை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதன் வெளிப்பாடாகதான் சில நாட்களாக சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவின் பேச்சும் அமைந்திருக்கிறது.

நீதி வழங்குவதுதான் பிரதானம்
கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், "1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது. அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. இதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதாவது குடியரசுத் தலைவர்தான் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சசோகதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி" என்று கூறியிருந்தார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்
அதேபோல, சில நாட்களுக்கு முன்னர் 'நீதித்துறை சீர்திருத்தம்' என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், "தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாகவும், நன்கு பரிட்சையமான நீதிபதிகளை பதவி உயர்வுக்காகவும் கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள் பரிந்துரைக்கின்றனர். இது மிகவும் தவறான விஷயமாகும். தங்களுக்கு தெரியாதவர்களை அவர்கள் பரிந்துரை செய்வதில்லை. என்னுடைய விமர்சனம் என்பது நீதித்துறை மீதோ அல்லது நீதிபதிகள் மீதோ கிடையாது, நான் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலிஜியம் அமைப்பைதான் விமர்சிக்கிறேன்" என்று பேசியிருந்தார். இந்த பின்னணியில்தான் சுப்பிரமணிய சுவாமியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. கொலிஜியம் அமைப்பு முறை குறித்து கடந்த 2015ல் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதற்கு மாற்றாக 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை' கொண்டு வந்தது. ஆனால் இந்த ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications