போஸ்டிங்கில் இருந்து நீக்கப்பட்ட மறுநாளே.. ட்வீட்டரில் பாஜகவை தூக்கிய சு.சாமி.. என்ன நடந்தது?
டெல்லி: பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி நீக்கப்பட்டதை அடுத்து அவர் தனது ட்விட்டர் பயோவில் இருந்து பாஜக என்பதை நீக்கி உள்ளார்.
நேற்று பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. கட்சியில் முன்பு தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருந்த பலரின் பதவி பறிக்கப்பட்டு புதிதாக பலருக்கு பதவி கொடுக்கப்பட்டது.
பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் மொத்தமாக 80 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு நேற்று மொத்தமாக மாற்றப்பட்டது. மத்திய அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், ப்ரஹாலாத் பட்டேல், சுரேஷ் பிரபு, துஷ்யந்த் சிங், வசுந்தரா ராஜே, விஜய் கோயல், வினய் கட்டியார், எஸ்எஸ் அலுவாலியா போன்ற பலரின் பெயர்கள் இந்த பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

வருண் காந்தி
அதேபோல் வருண் காந்தி, மேனகா காந்தி ஆகியோர் பெயரும் இதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் சமீபத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். விவசாயிகளை கொன்றவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

நீக்கம்
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தற்போது நீக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி நீக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஜனதா கட்சியில் இருந்த போதே பாஜகவை அவ்வப்போது விமர்சனம் செய்து வந்தவர் சுப்பிரமணியன் சாமி. அதன்பின் பாஜகவில் இணைத்தும் கூட பாஜகவை விமர்சனம் செய்தார்.

மோடி
பிரதமர் மோடியை ட்விட்டரில் வெளிப்படையாக சுப்பிரமணியன் சாமி சில இடங்களில் விமர்சனம் செய்து இருக்கிறார். பல கொள்கை முடிவுகளை கண்டித்து உள்ளார். பாஜகவில் இருந்தாலும் சில பாஜக தலைவர்களை ட்வீட்டரில் விமர்சனம் செய்துள்ளார். முக்கியமாக பெட்ரோல் டீசல் விலை குறித்தும், பொருளாதார நிலை குறித்தும் தொடர்ந்து இவர் விமர்சனங்களை வைத்து வந்தார். ஆனாலும் இவர் மீது பாஜக தலைமை பெரிதாக நேரடி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை
இந்த நிலையில்தான் தற்போது பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பட்டியலில் இருந்து பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு எடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இன்று பாஜக என்ற வார்த்தையை தனது ட்விட்டர் பயோவில் இருந்து நீக்கி உள்ளார். முன்பு பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் என்று இருந்ததை நீக்கிவிட்டார். மற்றபடி பயோவில் பாஜக என்ற வார்த்தை எங்கும் இடம்பெறவில்லை.

நீக்கம்
மொத்தமாக பாஜக என்பதை நீக்கிவிட்டு "Rajya Sabha MP, Former Union Cabinet Minister, Harvard Ph.D in Economics; Professor, I give as good as I get." என்பதை மட்டும் குறிப்பிட்டு உள்ளார். ராஜ்ய சபா எம்பி என்பதை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார். சுப்பிரமணியன் சாமியின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications