ப.சிதம்பரம் இப்படி ஓடி ஒளிஞ்சிட்டாரே.. டிவீட் போட்டு சு. சாமி குஷி
ப.சிதம்பரம் குறித்து சுப்பிரமணிய சுவாமி ட்வீட் போடுள்ளார்.
டெல்லி: ப.சிதம்பரம் இப்படி ஓடி ஒளிஞ்சிட்டாரே என்று சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளதுதான் தற்போது இணையத்தில் சுடசுட வைரலாகி வருகிறது.
ப.சிதம்பரத்துக்கு தமிழ்நாட்டில் எப்படி எச்.ராஜாவோ, அதுமாதிரி டெல்லியில் சுப்பிரமணியசாமிக்குதான் பரம விரிசல். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ப.சிதம்பரத்தை வறுத்தெடுப்பது சுப்பிரமணிய சாமியின் வழக்கம்.

11 வருஷமாக நடந்து வரும் சிதம்பரம் வழக்கு, இப்போது இறுதி கட்டத்தையும், உச்சத்தையும் எட்டியுள்ளது. அவரை கைது செய்ய வீட்டுக்கு சென்றபோது, அவர் அங்கு இல்லை என்ற தகவலை அறிந்து அதிகாரிகள் நேற்று சாயங்காலம் திரும்பிவிட்டனர்.
அதனால் ஊழல் காரணமாக அவர் தலைமறைவாகி இருக்கலாம் ஒரு பேச்சு எழுந்துள்ளது. அதனால் அவரை சிபிஐ வலைவீசி தேடி வருகிறது. இந்த சமயத்தில் சுப்பிரமணியசாமி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
4 முறை மத்திய நிதியமைச்சர், ஒருமுறை உள்துறை அமைச்சர் என நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்த முக்கிய தலைவர் ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் தலைமறைவாக இருப்பது சரியா? என்று பாஜகவினர் ஏற்கனவே இணையத்தில் நோண்டி நுங்கெடுத்து வருகிறார்கள். இப்போது அப்படி ஒரு கேள்வியை சுவாமியும் கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
ப.சிதம்பரம் ஓடி ஒளிந்துள்ளார் என சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சுப்பிரமணிய சாமி எந்த ட்வீட் போட்டாலும் அது பரபரப்பாக பேசப்படும் என்பது தெரிந்த சமாச்சாரம்தான் என்றாலும், இந்த டுவீட்டுக்கு மட்டும் சுமார் 2 லட்சம் லைக்ஸ்களுக்கு மேல் குவிந்துவருவது ஆச்சரியமாக உள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications